ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். திருமணத்திற்கு பிறகு அவர் சந்தித்த சில குடும்ப பிரச்னைகளால் சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். பின்னர் அதிலிருந்து மீண்டும் பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு ஓரளவுக்கு வரவற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் அதற்கு அடுத்து எந்த படங்களிலும் கமிட்டாகாமல், நல்ல கதைக்காக காத்திருந்த பிரசாந்த், இப்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். படத்திற்கு ''சாகசம்'' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தகவலை பிரசாந்தே கூறியுள்ளார்.
மேலும் பேஸ்புக்கில் உள்ள தனது நண்பர்கள் சிலர் தேர்வு செய்த பெயரில் ஒன்றை தேர்வு செய்து படத்திற்கு சாகசம் என்று பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது படத்திற்கான ஹீரோயின் தேர்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்