தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
காமெடி நடிகர் அப்புக்குட்டி அஜீத், தமன்னா நடிக்கும் வீரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: "காமெடியனாக சினிமாவுக்குள் வந்தாலும் அழகர்சாமியின் குதிரை, மன்னாரு படங்களில் கதையின் நாயகனாகவும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். கதையின் நாயகனாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதம் இல்லை. அதனால் நல்ல கேரக்டர் எந்த படத்தில் கிடைத்தாலும் நடிக்கிறேன். மணிரத்னம் உதவியாளர் அருள் டைரக்ட் செய்யும் மேல் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவனாக நடிக்கிறேன். எங்க காட்டுல மழை, ஒன்பது குழி சம்பத், நம்பர் பிளேட், படங்களில் நடித்து வருகிறேன்.
அஜீத் சாருடன் நடித்திருக்கும் வீரம் படம் என்னை அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்லும். வீரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். படத்தில் நடிக்கும்போது அஜீத் சார் காட்டிய அன்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் கையால் சமைத்த உணவை சாப்பிடும் பாக்கியமும் கிடைத்தது. சின்ன நடிகன் என்று பார்க்காமல் நன்றாக நடித்தால் தோளை கட்டிப்பிடித்து பாராட்டி விடுவார். அவரைப்போன்ற வெள்ளிந்திரியான ஹீரோக்களை பார்ப்பது அரிது. மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் அப்புக்குட்டி.