தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மரியான், நய்யாண்டி படங்கள் சரியான வரவேற்பை பெறாததால் வேலை இல்லா பட்டதாரியை அக்கறையோடு உருவாக்கி வருகிறார் தனுஷ். அவரின் சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. வேல்ராஜ் டைரக்ட் செய்கிறார். அமலாபால் ஹீரோயின். அவருக்கும் இது முக்கியமான படம். 2013ல் வெளிவந்த ஒரே படமான தலைவா அவருக்கு உதவவில்லை. அதனால் இந்தப் படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்.
புத்தாண்டையொட்டி இதன் டீசர் நேற்று இரவு யூ டியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் வில்லன்கள் குரூப் ஒன்று தனுசை தாக்கி விடுகிறது. உடனே தனுஷ் "உங்களுக்கு 30 செகண்ட் டயம் தர்றேன். அதுக்குள்ள என்னை அடிச்சதுக்கு என்கிட்டேயும், எங்கம்மாகிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு போயிட்டே இரு" என்கிறார். அதற்கு வில்லன்களில் ஒருவன் "கேட்கலேன்னா என்னடா பண்ணுவே" என்கிறார். "அடிப்பேன்" என்கிறார். தனுஷ்.
அடுத்து ஒரு காட்சியில் கையில் சர்டிபிக்கேட்டுடன் வேலை கிடைக்காத விரக்தியில் நடக்கிறார். கடைசி காட்சியில் நண்பன் ஒருவன் வேலைக்கு சென்று விட்டு வந்து சம்பள பணத்தை எண்ணுகிறான். உடனே தனுஷ் "முதல்ல யார் சம்பாதிக்கிறாங்கங்றது முக்கியமில்ல. யார் கரெக்டான நேரத்துல சம்பாதிக்கிறாங்கறதுதான் முக்கியம்" என்று பன்ஞ் டயலாக் பேசுகிறார்.
டீசரில் எதுவும் புதிதாக இல்லை. பழைய தனுஷ் படங்களின் பாதிப்பே இருக்கிறது. படத்தின் ஆடியோ பிப்ரவரி 14ந் தேதி ரிலீசாகிறது. அனிருத்தின் இசையில் அத்தனை பாடல்களையும் தனுசே எழுதி பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.