'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.வி.குமார் தொடர்ந்து இளம் திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். தினேஷ் (அட்டக்கத்தி), கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்) மற்றும் இந்த படங்களுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயண் ஆகியோர் சி.வி.குமாரின் அறிமுகங்களே.
இதில் இவர்களோடு இணைந்து 2014ம் ஆண்டு மீண்டும் படம் தயாரிக்க இருக்கிறார் சி.வி.குமார். நலன் குமாரசாமி எக்ஸிமோ காதல் என்ற ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார். இதனை சி.வி.குமார் தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. தற்போது ஜிகிர்தண்டாவை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ், அடுத்து சி.வி.குமாருக்கு படம் இயக்குகிறார். 2014ன் மத்திய பகுதியில் இந்த படம் ஆரம்பமாகிறது. இரண்டு படங்களுக்குமே சந்தோஷ் நாராயணன்தான் இசை. இரண்டில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.