இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகர்கள் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடினார்கள். காரணம் அவர்கள் இந்த ஆண்டு தலா ஒரு வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.
ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியையும் சேர்த்து தாய்லாந்தின் புக்கட் தீவில் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார். அவரைப்போலவே அமீர்கான் தூம் 3 வெற்றியையும் சேர்த்து பன்ஞ்சாகனியில் நண்பர்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார். சல்மான்கான் யுஷேரில் உள்ள பன்வெல் பண்ணை இல்லத்தில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். பரோலில் விடுதலையாகி இருக்கும் சஞ்சய் தத் மும்பையில் தன் குடும்பதினருடன் புத்தாண்டை கொண்டாடினார். ஆர்.ராஜ்குமார் படத்தின் வெற்றியுடன் ஷாகித் கபூர் லாஸ்ஏஜென்சில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்.
அபிஷேக் பச்சன் தன் மனைவி ஐஸ்வர்யாராய் மகள் ஆரத்யாவுடன் துபாயில் கொண்டாடினார். சோனம் கபூர் கோவாவில் நண்பர்களுடன் புத்தாண்டு ஆட்டத்தை போட்டார். ரன்பீர் கபூர் நியூயார்க்கிலும், சயீப் அலிகான் சுவிட்சர்லாந்திலும், மாதுரி தீட்சித் சிங்கப்பூரிலும், புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
சிறப்பு அம்சமாக பிரியங்கா சோப்ரா சென்னையில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ரசிகர்களுடன் குத்தாட்டம்போட்டு புத்தாண்டை கொண்டாடிவிட்டு 4 கோடி சம்பளத்துடன் மும்பை கிளம்பினார்.