இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மும்பை சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் குறிப்பிடத்தக்கவர். இவர் சமீபத்தில் தனது மனைவி சூசனை விவாகாரத்து செய்தார். முன்னதாக, கடந்த டிசம்பர் 13-ந்தேதி அன்று தங்களது திருமண வாழ்க்கை முடிவு பெறுவதாகவும் அறிவித்தார் ஹிருத்திக்.
இந்த நிலையில், மனைவி சூசனுக்கு 100 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக ஹிருத்திக் வழங்கியதாக மும்பை மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. இந்த செய்தியால் ஹிருத்திக் எந்த சலனமும் அடையாதபோது, அவரது மனைவி சூசன் செம டென்சனாகி விட்டார். எனக்கு ஜீவனாம்சமாக இதுவரை ஹிருத்திக் எந்த பணமும் தரவில்லை. அதனால் உண்மைக்கு புறம்பான இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று மீடியாக்களை சாடியுள்ளார் சூசன்.
மேலும், நாங்கள் பிரிந்து வாழ்ந்தாலும், ஒருவர் மீது ஒருவர் இன்னமும் மரியாதை வைத்திருக்கிறோம். எங்கள் பிள்ளைகளை பாசமுடன் வளர்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார் சூசன்.