தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்தியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் 2005ம் ஆண்டு அறிமுகமான படம் ஜித்தன். ராதிகா சரத்குமார் தயாரிக்க, சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ரமேசுக்கு ஜோடி பூஜா. வின்செண்ட் செல்வா டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படம் ஹிட்டாகவே ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் அதற்கு பிறகு அமைந்த படங்கள் எதுவுமே ஜித்தன் ரமேசுக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக ஒஸ்தி படத்தில் சிம்புவின் அண்ணனாக நடித்தார்.
மீண்டும் ஹீரோவாக ஜெயிக்க ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதனை விமலஸ்ரீ குளோபல் மீடியா, ஆர்.பி.எம் சினிமாஸ் தயாரிக்கிறது. ராகுல் பரமஹம்சா என்பவர் டைரக்ட் செய்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராக இருக்கும் படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜித்தன் ரமேஷ் தனியாக நடிக்கும் காட்சிகளுடன் இன்று (ஜனவரி 1) ஷூட்டிங் தொடங்கியது.
கடலில் கிடைத்த ஒரு அபூர்வ சிலையால் நினைத்த நேரதில் மறைந்து விடும் சக்தி கிடைக்கும் ரமேஷ், பூஜாவை காதலிக்க அந்த காதலுக்கு எதிரானவர்கள் அவரை கொன்று விடுவதாக முதல் படத்தின் கதை முடியும். இரண்டாம் பாகத்தில் அவர் குண்டு காயம்பட்டு பிழைத்துக் கொள்ள அவர் காதலியை கொன்றவர்களை தன் மறையும் சக்தியை கொண்டு பழிவாங்கும் கதையாம்.