டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனிருத் இசை அமைத்து வரும் படம் ஆக்கோ. ஆர்வகோளாறு என்பதன் சுருக்கம்தான் இந்த ஆக்கோ. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்.ஷியாம்குமார் இயக்குகிறார். சிவா கேமராமேன். ரீபேல் நிறுவனத்தின் சார்பில் தீபன்பூபதி, ரத்தீஷ் வேலு தயாரிக்கிறார்.
இந்த படத்துல முதலில் நடிக்க இருந்தவர் அனிருத். ஆனால் அவர் இப்போது இசையில் மட்டும் ஆர்வம் காட்டுவதால் இந்தப் படத்துக்கு நான் இசை மட்டும் பண்றேன் என்று சொல்லி படத்துக்கு 6 பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளரும், இயக்குனர்களும் நெகிழ்ந்து விட்டார்கள். இதனால் புத்தாண்டு அன்று வெளியிட்ட படத்தின் பர்ஸ்ட்லுக்கில் அனிருத்தின் படங்களை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தி விட்டார்கள்.
இதுகுறித்து படத்தின் டைரக்டர் எம்.ஷியாம் குமார் கூறியதாவது: "அனிருத் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவருக்கு இந்த கதையை சொன்னேன். அவர் இசை மட்டும் அமைக்க ஒப்புக் கொண்டு பாடல்களையும் கொடுத்துவிட்டார். அத்தனையும் சிறப்பாக வந்திருக்கிறது. 2014-ன் சூப்பர் ஹிட் பாடல்களாக அது இருக்கும். அவர் படத்தில் நடிக்காவிட்டாலும் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக பர்ஸ்ட் லுக்கில் அவர் படத்தை வெளியிட்டிருக்கிறோம். ஆர்வகோளாறு காரணமாக மூன்று இளைஞர்கள் ஒரு காரியத்தை செய்து விட அவர்கள் படுகிற அவஸ்தைதான் படத்தோட ஸ்டோரி. ஒரே இரவில் நடக்கும் திகில் கதை" என்றார்.