Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்!

31 டிச, 2013 - 15:57 IST
எழுத்தின் அளவு:

விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி மியூசிக் போட்டிருக்கிறார். ஜெயபிரகாஷ் கேமராமேன். வருண், நேகா, மதன் கோபால் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே ஆஷிக்கின் நண்பர்கள். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படத்தின் பாடல் காட்சி போட்டுக் காட்டப்பட்டது. அதில் ஒரு பாடல் காட்சியை பார்த்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 12 வயது நிரம்பிய சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற ஆஜித், ஒரு 7 வயது சிறுமியுடன் பருத்தி வீரன் கார்த்திக் பிரியாமணி ரேஞ்சில் டூயட் பாடினார். ஆஜீத் லவ் மூடில் அங்கும் இங்கும் நடக்க அந்த சிறுமி வெட்கத்தால் சிரித்தபடி அவனை பின் தொடர்கிறாள். அவளது சிவப்பு நிறம் பற்றி அவன் பெருமையாக பேசுகிறான். பாட்டு முடிந்ததும் பத்திரிகையாளர்கள் ஆஷிக்கை கேள்வியால் துளைத்து எடுத்து விட்டார்கள். அவற்றில் சில கேள்வி பதில்கள்...

* எப்படி இந்த பாடலை எடுத்தீர்கள்?
பருத்தி வீரனை பார்த்துதான்.

* சிறுவன் சிறுமிகள் டூயட் பாடுவது போன்று எடுத்திருப்பது சமூகத்தை பாதிக்காதா?

இது ஒருவன் சொல்லும் சினிமா கதையை இன்னொருவன் கற்பனை செய்கிற மாதிரியான காட்சிதான். அதற்கான காரணம் படத்தில் இருக்கிறது.

* படத்தில் இருக்கட்டும். டி.வியில் பாடல் மட்டும் வரும்போது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் அதை பார்ப்பார்களே?

அந்த கண்ணோட்டத்தில் யோசித்து இதனை வைக்கவில்லை. படமாக பார்க்கும்போது அதை ஜாலியாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

இப்படியாக கடைசி வரை சமாளித்தார் டைரக்டர் ஆஷிக்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

siva siva - brasilia,பிரேசில்
31 டிச, 2013 - 23:51 Report Abuse
siva siva இதுல ஒனும் பெருசா தப்பு இருக்கற மாத்ரி தெரில.பெரியவங்கள வச்சி எடுக்கறத தான் பாக்க முடில,சின்ன பசங்க நடிக்கறத பாக்க விளையாட தான் இருக்கும்.மேலும்,மோசமான படம்,சீன் லாம் வந்துருக்கு இதுவரை,அப்போ கொதிக்காத கொதிப்பு இபோ திடிர்னு வந்துடுத்த??யாரவது ஒருத்தர் start பன்னிர்பார்,அப்டே எல்லா பத்திரிகைகளும் follow பண்ணி ஒரு சீன் போடுடிங்க,அதான
Rate this:
டவுட் கோபாலு - Chennai,இந்தியா
31 டிச, 2013 - 17:46 Report Abuse
டவுட் கோபாலு தருதல பெத்தததுங்க கிட்ட இருந்து நல்ல விஷயமா எதிர் பார்க்க முடியும்...?
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
31 டிச, 2013 - 16:58 Report Abuse
JAIRAJ இது சரியல்ல .............இந்த கேணையன் எடுத்த இந்த படத்தை பிடுங்கி எரித்து விடுங்கள். மேலும் எதிலுமே வெளியிடாதவாறு தடை செய்யுங்கள். உடனே சைபர் க்ரைமையும் அலர்ட் செய்து வெவரம் சொல்லி எந்த விதத்திலும் வெளிப்படுத்த முடியாதவாறு தடை செய்யவேண்டும்.இந்த குழந்தயின் பெற்றோர்கள் மூடர்களா......அல்லது பணத்தாசை பிடித்த மிருக்கங்களா ? பணம் வாங்கி இருந்தால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டாம். இது போன்று அறிவில்லாமல் எடுத்ததிற்காக அபராதத் தொகையாக அது இருக்கட்டும். இந்த மாணவர்கள் வேறு வித்தத்தில் நல்லவிதமாக எடுத்தல் நல்லது. பத்திரிக்கை யாளர்கள் கேள்வி கேட்டதுடன் முடிந்ததா............அவர்களுக்கு சமூக உணர்வு கிடையாதா. உடனே நடவடிக்கை எடுத்தல் நல்லது.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
31 டிச, 2013 - 16:42 Report Abuse
jayanantham சிறுவர் சிறுமிகளைப் பற்றி இந்த நாதாரிகளுக்கு என்ன கவலை.... .சில்லறையும், சின்ன புத்தியும்தானே இவனுக குறிக்கோள்கள்.
Rate this:
Vadiveldesigns - al ain,ஐக்கிய அரபு நாடுகள்
31 டிச, 2013 - 16:42 Report Abuse
Vadiveldesigns THIRUNTHA CINEMA ULAGAM....KATHALAI...MAIYAMAKA KONDU.....PADAM YEDUKKIRATHU.....(INTHANAL INTRAIYA THALAI MURAI.....KATHAL PAITHIYAMAKA .....THIRIKIRATHU....)
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in