மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல பெங்காலி நடிகை சுசித்ரா சென். 1952ல் சேஷ் கோதே என்ற பெங்காலி படத்தில் அறிமுகமான சுசித்ரா சென் நூற்றுக்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்தார். 1955ம் ஆண்டு திலீப்குமாருடன் நடித்த தேவதாஸ் படம் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து முசாகர், பாம்பே கா பாபு போன்ற இந்திப் படங்களில் நடித்தாலும் தன் சொந்த மொழியில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினார்.
தற்போது 82 வயதான சுசித்ரா கோல்கட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யார் துணையும் இன்றி ஒரே ஒரு வேலைக்காரியுடன் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 29) இரவு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரின் உடல் செயல்பாடுகள் மிகவும் குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். கருப்பு வெள்ளை சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த சுசித்ராசென் மருத்துவனையின் வெள்ளை சுவர்களுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.