ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2014ம் ஆண்டு பிறப்பதையொட்டி தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றை ஒளிபரப்புகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமாவை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டவை. பொங்கலுக்கு வெளிவரும் படங்களின் முன்னோட்டங்கள், நடிகர் நடிகைகளின் பேட்டியே பிரதானமாக இடம் பெறுகிறது.
இந்த ஆண்டு புத்தாண்டு புதுப்பட போட்டியில் விஜய் டி.வி.முதலிடம் வகிக்கிறது. 2013ம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை மாலை 6 மணிக்கு ஒளிபரப்புகிறது. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, சுவாதி, நடித்துள்ள படம். அதோடு காலை 10 மணிக்கு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை ஒளிபரப்புகிறது. ராஜ் டி.வி பகல் 1.30 மணிக்கு நான் ராஜாவாக போகிறேன் படத்தை ஒளிபரப்புகிறது. அதுவும் 2013ல் வெளியான படம்தான். நகுல், சாந்தினி நடித்துள்ள படம்.
இதுதவிர மற்ற சேனல்கள் தங்கள் கையிருப்பில் உள்ள படங்களில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பி புத்தாண்டை சமாளிக்கிறது.