சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு. சமூக நோக்கத்துடன் அவர் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா-விஜயசேதுபதி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்துக்கான நடிகர் தேடி வந்த ஜனநாதன், இப்போது தனது இயற்கை படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஷாமை அந்த வேடத்துக்கு செலக்ட் பண்ணியிருக்கிறார்.
ஏற்கனவே தெலுங்கில் வெளியான கிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டலாக நடித்திருந்த ஷாம், தில்லாலங்கடி படத்திலும் அதே வேடத்தில் நடித்து அசத்தியிருந்ததால், இந்த படத்தின் போலீஸ் வேடத்துக்கு அவரே பொருத்தமாக இருப்பார் என்று சான்ஸ் கொடுத்திருக்கிறாராம் ஜனநாதன். இதனால் இப்போது ஆர்யா-விஜயசேதுபதி-ஷாம் என மூன்று ஹீரோக்கள் புறம்போக்கு படத்தில் நடிக்கிறார்கள்.
அதேபோல், ஹீரோயினியைப்பொறுத்தவரை கார்த்திகா மட்டுமே. அவரும் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறார். அதனால், அவருக்கு தற்போது தீவிர சண்டை பயிற்சி அளித்து வருகிறார்கள். ஆக, கதைப்படி எந்த நடிகர்களுக்கும் ஜோடியாக இல்லாமல், கார்த்திகாவும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறாராம்.