பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தமிழக்கு ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது இங்க என்ன சொல்லுது, விஞ்ஞானி படங்களில் நடித்து வருகிறார்.
மீரா ஜாஸ்மின் பிரபல மாண்டலின் இசை கலைஞர் ராஜேசை காதலித்து வந்தார். இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். காதலை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் மீரா ஜாஸ்மின், துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
ஜான் டைட்டஸ் திருவனந்தபுரம் நந்தனம் பகுதியைச் சேர்ந்த டைட்டஸ்-கதககுமாரி தம்பதிகளின் மகன். சென்னை ஐ.ஐ.டியில் படித்து விட்டு துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி 12ந் தேதி திருவனந்தபுரம் எல்.எம்.எஸ் தேவாலயத்தில் நடக்கிறது. அதன் பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாள சினிமா உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.