'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழில் உருவாகும் பாதி படங்களில் அவர்தான் இருக்கிறார். மீதி படங்களெல்லாம் அவரால் கால்சீட் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவைதான். இப்படி அவர் கால்சீட் கொடுத்த படங்களில்கூட அவரால் குறிப்பிட்ட நாளில் நடித்துக்கொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மனிதர் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், மலையாளத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான்-நஸ்ரியா நடிப்பில் தயாராகும் சலாலா மொபைல்ஸ் என்ற படத்தில் படம் முழுக்க துல்கர்சல்மானுடன் வருவது போன்ற வேடத்தில் நடித்திருக்கிறாராம் சந்தானம். இப்படம் மூலம் முதன்முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ள சந்தானம், கோயமுத்தூரைச்சேர்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
அதோடு, தமிழில் இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்காத மாறுபட்ட கெட்டப்பாம். தமிழில் ஹீரோக்களுடன் நண்பன் என்ற போர்வையில் சரக்கு அடித்துக்கொண்டு சுற்றித்திரிபவராக நடித்து வரும் சந்தானத்துககு, மலையாளத்தில் வித்தியாசமான கேரக்டர் என்றதும் உடனே அட்ஜஸ்ட் பண்ணி கால்சீட் கொடுத்து விட்டாராம். துல்கர்சல்மான் தமிழுக்கு புதிது என்றாலும், சந்தானம், நஸ்ரியா ஆகிய இருவரும் இருப்பதால் இப்படம் தமிழிலும் வெளியாகிறதாம்.