Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளவரசியா? இலவச அரிசியா? அம்மாவை அட்டாக் பண்ணும் காமெடியன்!

29 டிச, 2013 - 09:59 IST
எழுத்தின் அளவு:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ஹீரோவாக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் புயல் காமெடியன், தனது படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்குள் வெளியாட்கள் யாருமே நுழையாதபடி பலத்த பந்தோபஸ்து போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ஆனால் அவர்களது கட்டுக்காவலையும மீறி அப்படி என்னதான் விசேசமாக படமாக்குகிறார் என்பதை பார்ப்போமே என்று ஸ்பாட்டுக்குள் நுழைந்தபோதுதான் அவர் படமாக்கிக்கொண்டிருந்த அந்த காட்சி கண்ணில் பட்டது.
அதாவது, இளவரசி கோலத்தில் செல்லும் கதாநாயகியை புயல் காமெடியன் சீண்டுகிறார். அப்போது, இளவரசியையே சீண்டும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டதா? என்று நாயகி நடிகரைப்பார்த்து கோபத்துடன் கேட்கிறார். அதற்கு நடிகரோ, அவர் இளவரசி என்று சொன்னதை... என்ன இலவச அரிசியா? என்று கிண்டலடிப்பது போல் படமாக்கப்பட்டது.
இதுபோன்று ஆளுங்கட்சியை அட்டாக் பண்ணும் நிறைய சமாச்சாரங்களை படம் முழுக்க பேசுகிறாராம் புயல். அதனால்தான், இந்த விசயம் இப்போதே லீக்அவுட்டாகி விட்டால் உஷாராகி விடுவார்கள் என்பதற்காக படப்பிடிப்பை செக்யூரிட்டி போட்டு நடத்தி வருகிறாராம். ஆனால், இதைப்பார்த்து சிலர், தளபதி நடிகருக்கு வந்த சோதனை தெரிந்தும் இந்த நடிகர் இப்படி வம்படியாக லந்து பண்ணிக்கொண்டிருக்கிறாரே என்று ஸ்பாட்டில் சிலர் கிசுகிசுப்பதும் நம் காதில் விழுந்தது.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Vaal Payyan - Chennai,இந்தியா
30 டிச, 2013 - 19:09 Report Abuse
Vaal Payyan வைகை ... நீ வச்சிட்டே கை ... இனி கஜபுஜ தெனாலிராமன் ... கப் சிப் வடிவேலன் தான் ....
Rate this:
vins - salem  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 10:20 Report Abuse
vins ஆப்பூ வெச்சிடியே
Rate this:
shark சாரதி - Kondayampatti ,இந்தியா
30 டிச, 2013 - 09:58 Report Abuse
shark சாரதி போகிற போக்கை பார்த்தால் ஆளுங்கட்சியில் இருப்பவரை புகழ்ந்து தள்ளினால் மட்டும் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் போல ..
Rate this:
Sagaa Sagaa - ggg,பெனின்
30 டிச, 2013 - 06:13 Report Abuse
Sagaa Sagaa தினமலருக்கு எதுக்கு இந்த போட்டு கொடுக்கும் வேலை?
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
30 டிச, 2013 - 02:26 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம், மொழிச் சுதந்திரம் இல்லையே என்பது இக்காலத்தில் ஒரு பொருட்டேயின்றி போய்விட்டது.
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in