Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2013 இசை கண்ணோட்டம்...!

28 டிச, 2013 - 16:09 IST
எழுத்தின் அளவு:

யுவனின் வீழ்ச்சியும், இமானின் எழுச்சியும் : கடந்த ஆண்டுவரை திரைஇசையில் முன்னணியில் இருந்த யுவன் சங்கர் ராஜா இந்த ஆண்டும் அதிக படங்களில் இசையமைத்து முதல் இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. சமர், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தில்லுமுல்லு, பிரியாணி மூன்று பேர் மூன்று காதல், ஆதிபகவன், ஆதலால் காதல் செய்வீர், ஆகிய படங்களில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட்டானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பம், பிரியாணி இரண்டுமே படம் நன்றாக ஓடினாலும் பாடல்கள் பேசப்பட வில்லை. தங்க மீன்கள் படத்தில் மட்டுமே பழைய யுவனைப் பார்க்க முடிந்தது.

இமான்

மைனாவில் தன் வெற்றிப் பயணத்தை துவக்கிய இமான். அதை 2013 வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இசை அமைத்த படங்கள் ஹிட்டாகாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகிவிட்டன. இந்த ஆண்டு அவர் இசை அமைத்த தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு மூன்றுமே ஹாட்ரிக் ஹிட் அடித்தது. ஊதா கலரு ரிப்பன்... பாட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஹிட்டுக்கும், பை பை கலாசி பை... பாண்டிய நாடு ஹிட்டுக்கும் ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா மூலம் 2014ம் ஆண்டின் கணக்கை துவக்குகிறார். பிரபு சாலமனின் கயல், வடிவேலுவின் தெனாலிராமன், என்னமோ ஏதோ, தேரோடும் வீதியிலே, சிகரம் தொடு, என்னதான் பேசுவதோ, பேரலை என 2014ம் ஆண்டும் இமானின் இசையில் மிதக்க இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிரகாஷ்குமார் பரதேசி, அன்னக்கொடி, தலைவா, ராஜாராணி, உதயம் என்.எச் 4, நான் ராஜாவாக போகிறேன் படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இதில் ராஜாராணியில் அனைத்து பாடல்களும், மற்ற படங்களில் ஒன்றிரண்டு பாடல்களும் ஹிட்டானது. பரதேசியின் பின்னணி இசை பரவலான பாராட்டை பெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரகுமான் கடல், மரியான் படங்களுக்கு இசை அமைத்தார். பாடல்கள் ஹிட்டானதும் படங்கள் தோல்வி அடைந்தது.

தமன் : கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்துயானை, அழகுராஜா, சேட்டை படங்களுக்கு இசை அமைத்தார்.

அனிருத் : எதிர்நீச்சலில் அனைத்து பாடல்களையும் அழகாக கொடுத்தார். வணக்கம் சென்னையில் ஒரு சில பாடல்கள் வரவேற்பை பெற்றது.

ஸ்ரீகாந்த் தேவா : ஸ்ரீகாந்த் தேவா 5 படங்களுக்கு இசை அமைத்தார் எதுவும் ஹிட்டாகவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் : இரண்டாம் உலகம், என்றென்றும் புன்னகைக்கு இசை அமைத்திருந்தார். பெரியதாக எதுவும் மனதை கவரவில்லை.

வித்யாசாகர் - (ஜன்னல் ஓரம்), விஜய் ஆண்டனி - (ஹரிதாஸ்), தேவி ஸ்ரீபிரசாத் - (அலெக்ஸ் பாண்டியன்) படங்களுக்கு இசை அமைத்திருந்தனர்.

இளையராஜா : இந்த தலைமுறையிலும் இளையராஜா தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார். மறந்தேன் மன்னித்தேன், சித்திரையில் நிலாச்சோறு படங்களுக்கு அவர் அமைத்த இசையும், பாடல்களும் பெரிதாக மக்களை கவரவில்லை. ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தலைமுறைகள் படத்துக்கு அவர் அமைத்த பின்னணி இசை இன்றும் அவர்தான் இசைராஜா என்பதை நிரூபித்தது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 டிச, 2013 - 13:32 Report Abuse
பி.டி.முருகன்    குறைந்த பட்சம் இரண்டு மாதமாவது ஒரு பாடல் மனதில் நிற்க வேண்டும். நல்ல கருத்துள்ள பாடல் வரிகளை கவிஞர்கள் எழுத வேண்டும். அதை நல்ல இசையின் துணையோடு பாடகர்கள் பாட வேண்டும்.
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
29 டிச, 2013 - 13:22 Report Abuse
g.s,rajan ராஜா, ராஜாதான் அவர் பாடல்கள் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது .இப்போ வரும் பாட்டெல்லாம் சும்மா ,மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றாது .பாட்டு வந்த புதிதில் கேட்க நன்றாக இருப்பது போல் தோன்றும் ,பிறகு சில நாட்கள் கழிந்த பின் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து இடம் பெறாது இசைஞானி ,இசைஞானி தான் ,தயவு செய்து அவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள் .இளையராஜா சார் ஈஸ் தி கிரேட் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
dominic - californiya,யூ.எஸ்.ஏ
29 டிச, 2013 - 12:06 Report Abuse
dominic ரகுமான் இசை அமைக்கவிட்டலும் ரகுமான் ரகுமான்தான்
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
29 டிச, 2013 - 11:40 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு என்னது யுவன் இந்த ஆண்டு சருகளா ? செம காமெடி பாஸ் நீங்க... Evergreen Yuvan .. " U1 "
Rate this:
m,israth ali - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 டிச, 2013 - 10:28 Report Abuse
m,israth ali rahuman romba besy
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in