பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பழம்பெரும் இந்தி நடிநகர் பாரூக் ஷேக்(வயது 65) மாரடைப்பால், துபாயில் காலமானார். ஹரம் ஹவா என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்வை துவக்கியவர் பாரூக் ஷேக், தொடர்ந்து ஷத்ரஞ் கி கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில், வெள்ளித்திரையில் மட்டுமின்றி டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் துபாய் சென்றிருந்த பாரூக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மறைந்த பாரூக்கின் உடலை மும்பை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாரூக்கின் உடல் மும்பை வந்ததும் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
இதனிடையே மறைந்த பாரூக்கிற்கு அமிதாப் பச்சன், ஷாரூக்கான், சேகர் கபூர், சரிகா, போமன் இரானி, மகேஷ் பட் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.