Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காயத்ரியை கவர்ந்த விஜயசேதுபதி!

28 டிச, 2013 - 14:33 IST
எழுத்தின் அளவு:

18 வயசு என்ற படத்தில் அறிமுகமானவர் காயத்ரி. பெங்களூரைச்சேர்ந்தவரான இவருக்கு அந்த படம் பெரிய இடத்தை கொடுக்காதபோதும், அதன்பிறகு விஜயசேதுபதிக்கு ஜோடியாக சிறிய வேடத்தில் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் பெரிய இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனால், அதையடுத்து மத்தாப்பூ, பொன்மாலைப்பொழுது ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியாக அமையவில்லை.

இந்த நிலையில், மீண்டும் விஜயசேதுபதி நடித்துள்ள ரம்மி படத்தில் நடித்திருக்கும் காயத்ரி, அடுத்து அவர் நடிக்கும் மெல்லிசை என்ற படத்திலும் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதுபற்றி காயத்ரி கூறுகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெற்றி பெற்றிருப்பதால், அந்த செண்டிமென்ட் கருதி ரம்மி படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அப்படத்தில் நான் இனிகோவுக்குத்தான் ஜோடி. அதேபோல் இப்போது மெல்லிசை படத்தில் மீண்டும் விஜயசேதுபதிக்கு ஜோடியாகவே நடிக்கிறேன். இதனால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நான் தொடர்ச்சியாக விஜயசேதுபதியுடன் நடித்து வருவதால் அவர் எனக்கு சிபாரிசு செய்வதாக செய்தி பரவியுள்ளது. ஆனால், அது உண்மையல்ல. ஏற்கனவே நாங்கள் இணைந்து நடித்த படம் வெற்றி பெற்றிருப்பதால்தான் மீண்டும் அவர் படங்களுக்கு என்னை ஒப்பந்தம செய்கிறார்கள் என்று சொல்லும் காயத்ரி, தமிழ் சினிமாவுக்கு வரும்போது சூர்யாதான் எனது பேவரிட் ஹீரோவாக இருந்தார். ஆனால் இப்போது விஜயசேதுபதி எனது பேவரிட் ஹீரோவாகி விட்டார். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பால் என்னை அவர் கவர்ந்து விட்டார் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
29 டிச, 2013 - 00:33 Report Abuse
R.PERUMALRAJA now a days pickpockets , garbagepickers, half boil , full boil and etc etc all started to act as hero ...already cine field lost its credibility due many reasons including pirated cd's now one more failed strategy on top of its ailing condition ......so as to cover the nasty face of the heroes , sentimental background music is been played whenever they are shown in the screen . it is not even worth to see these faces in the pirated c....deee....issss
Rate this:
sabari - chennai  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 15:46 Report Abuse
sabari ஓ ஐ சீ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in