'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சரத்குமார், ராதிகா நடித்த நம்ம அண்ணாச்சி உள்பட சில படங்களை டைரக்ட் செய்தவர் எஸ்.ஜே.தளபதிராஜ். தற்போது அவர் தவமின்றி கிடைத்த வரமே என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பிரபுசாலமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
"இது மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய கதை. ஒரு தவறான மெடிக்கல் சர்ட்டிபிக்கேட்டால் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை சொல்லுகிற கதை. நடிப்பில் ஆர்வம் இல்லாத பிரபுசாலமன் எனக்காக இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எனது நெருங்கிய உறவினர் என்பதும், என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் என்பதும் இதற்கு காரணம். டாக்டராக நடிக்கும் பிரபுசாலமன் படத்தின் திருப்புமுனை கேரக்டர்" என்கிறார் தளபதி ராஜ்.