Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாட்டுக்கு தொடர்ந்து எதிரியாகவே இருக்கும் மிஷ்கின்!

25 டிச, 2013 - 12:13 IST
எழுத்தின் அளவு:

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம், அஞ்சாதேயில் கத்தாழ கண்ணால குத்தாதே, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா போன்ற குத்துப்பாட்டுக்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதோடு அந்த படங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்தன. கடைசியாக அவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பாடல்களே இடம்பெறவில்லை. ஆனால் அந்த படமோ வெற்றி பெறவில்லை. இதையடுத்து, மிஷ்கினிடத்தில் உங்கள் படங்களுக்கு குத்துப்பாடல்கள்தானே இதுவரை பலமாக இருந்துள்ளன. ஆனால் நீங்கள் எதற்காக அதை வெறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினால்,

அதற்கு, குத்துப்பாடல்கள்தான் சினிமாவில் எனக்கு பிடிக்காத விசயமே. இதற்கு முந்தைய எனது படங்களில் அந்த மாதிரி பாடல்கள் இடம்பெற்றது என்றால் அதற்கு தயாரிப்பாளர்களின் வற்புறுத்தல்தான் காரணம். அதனால்தான் எனக்கு பிடிக்காத விசயங்கள் என் படங்களில் இடம்பெற்று வந்தன என்கிறார்.

மேலும், குத்துப்பாடல்களுக்காக படம் ஓடுகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது. அந்த படங்களின் கதையும், காட்சியமைப்புகளும்தான் வெற்றிக்கு மூலகாரணம். குத்துப்பாடல்களே வெற்றியை தீர்மானிக்கின்றன என்றால், இன்றைக்கு குத்துப்பாட்டு இல்லாத படமே இல்லை. ஆனால் அப்படி இடம்பெறுகிற எல்லா படங்களும் வெற்றி பெறுவதில்லையே என்றும் எதிர்கேள்வி கேட்கும் மிஷ்கின், எதிர்காலத்தில் நான் இயக்கும் எந்தவொரு படத்திலும் இதுபோன்ற குத்துப்பாட்டுகள் இடம்பெறாது. காரணம், குத்துப்பாட்டுகளை நம்பி நானில்லை என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் அவர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 டிச, 2013 - 15:30 Report Abuse
Angry ஜெய் நேத்து தான் உங்க ஓநாய் படம் பாத்தேன் விஜய் டிவில, ரொம்ப சுமார் சார் , எல்லோரும் ஒரே மாதிரி உங்கள மாதிரி நடிக்குறாங்க , பழைய டி ஆர் படத்துல அப்டிதான் எல்லோரும் அவரை மாதியே நடிப்பாங்க , வேற நல்ல கொரியா படமா பாத்து நல்ல படம் ஒன்னு எடுங்க
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
25 டிச, 2013 - 22:17 Report Abuse
Mark great person of cinema industry ever
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2013 - 21:56 Report Abuse
vschandru610 gud sir. juz nw I watched the wolf and the lamb, amazing movie , excellent acting by all artist and gud work by all technicians. simply superb movie because something followed my back and stoped at the end of the movie, I realized tat our Mastero's work with music. no words to explain the feeling about movie, only can feel.
Rate this:
கரிகாலன் - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2013 - 17:39 Report Abuse
கரிகாலன் பாடலும் ஆடலும் ஒரு தரம்வாய்ந்த படத்தி்ன் யதார்த்தத் தன்மையைக் கெடுத்து விடும். இரான் மற்றம் கொரிய நாட்டுப் படங்கள் உலக அளவு போற்றப் படுவதும் இவையும் ஓரு காரணம். இதை உணர்ந்தவர் மிஷ்கின்.
Rate this:
gunalan - nagercoil  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2013 - 13:36 Report Abuse
gunalan நல்ல எண்ணம் வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in