ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வசந்த் அண்ட் கோ இளைய வாரிசு வினோத் வசந்த் தயாரிப்பில், மூத்த வாரிசு விஜய் வசந்த் நடித்திருக்கும் திரைப்படம் 'என்னமோ நடக்குது'. இதன் சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் 2013ம் ஆண்டின் பாராட்டுக்குரிய அறிமுக இயக்குநர்கள் 'ராஜா ராணி' அட்லி, 'மூடர் கூடம்' நவீன், 'எதிர்நீச்சல்' துரை செந்தில், 'சூதுகவ்வும்' நலன் குமாரசாமி, 'விடியும் முன்' பாலாஜி கே குமார் உள்ளிட்ட இளம் இயக்குநர்கள் வம்படியாக அழைத்து வரப்பட்டு, மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். காரணம், 'சென்னை-28', 'நாடோடிகள்' படங்களுக்கு அப்புறம் விஜய் வசந்துக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் இல்லை. அந்தப்படங்களிலும் நான்கைந்து ஹீரோக்களில் ஒருவர், ஹீரோவின் நண்பன்... என தன் சினிமா கேரியர் சின்னா பின்னாமாவது கண்டு நொந்து நூடுல்ஸ் ஆன விஜய், மேற்படி இளம் இயக்குநர்கள் தன்னை அவர்களது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்திக் கொள்ளவே இப்படி 2013 இளம் இயக்குநர்களை தங்கள் பட மேடையேற்றி கவுரவித்ததாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாய் பேசப்படுகிறது. ஆமாம் பின்னே வியாபார வாரிசுகளாயிற்றே!
என்னமோ நடக்குது! நடக்கட்டும் நடக்கட்டும்!!