Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனாவின் இன்னொரு முகத்தை காட்டும் தருசியம்!

20 டிச, 2013 - 14:49 IST
எழுத்தின் அளவு:

மீனா ரீ-என்ட்ரி ஆன தம்பிக்கோட்டை படம் வெற்றியை கோட்டை விட்டு விட்டதால், மீனா கட்டி வைத்திருநத நம்பிக்கை கோட்டைகளும் இடிந்து விழுந்தன. அதனால், பின்னர் அவர் பேசிக்கொண்டிருந்த படங்கள்கூட கைமாறிச்சென்றன. ஆனபோதும், தோல்வி முகத்தோடு பெங்களூர் சென்று முடங்கிக்கொள்ள விரும்பாத மீனா, தொடர்ந்து சின்னத்திரையில் முகம் காட்டியபடி தான் தொடர்ந்து கலைச்சேவையை தொடர விரும்புவதை சினிமாத்துறையினரக்கு சொல்லாமல் சொல்லி வந்தார்.

இருப்பினும், கோடம்பாக்கம் மீனாவை ஆதரிக்காத நிலையில், திருமணமான நடிகைகளின் புகழிடமாக திகழும் மலையாள சினிமா தற்போது மீனாவுக்கு கைகொடுத்துள்ளது. அதுவும் அங்குள்ள மிகப்பெரிய நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக தருசியம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது மனைவி கதாபாத்திரம் என்றாலும், மீனாவின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வெயிட்டான ரோலாம். அதனால் நடிப்பு பிரளயமாய் பொங்கி எழுந்திருக்கிறாராம்.

அதனால், இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் தனக்கென ஒரு வட்டம் உருவாகும் என்ற நம்பிக்கையில் அடிக்கடி கேரளா விஜயம் செய்கிறார் மீனா. மேலும், தருசியம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதால், படம் பார்வைக்கு வரும் நேரத்தில் கேரளாவில் இருந்தால் சில புதிய படங்கள் தேடிவரக்கூடும் என்று அநத சமயத்தில் கேரளத்தில் சில வாரங்கள் முகாமிடவும் திட்டமிட்டிருக்கும் மீனா, அந்த சமயத்தில் ஆயுர்வேதம் மூலம் தனது இளமையை மேலும் மெருகூட்டும் சிகிச்சையும் செய்து கொள்ளப்போகிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

palani - ahmedabad  ( Posted via: Dinamalar Windows App )
21 டிச, 2013 - 09:16 Report Abuse
palani மீனா நல்ல நடிகை
Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
20 டிச, 2013 - 22:10 Report Abuse
Mahendra Babu R அது "புகழிடம்" இல்லை "புகலிடம்"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in