‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் பேண்ட் பஜா பாரத். இந்த படத்தை தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனம் அதனை தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறது. நான் ஈ மூலம் தமிழில் பிரபலமான நானி ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் அழகி வாணி குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் டைரக்ட் செய்கிறார். லோகநாதன் கேமராமேன், தரண் இசை.
பணக்கார வீடுகளில் நடக்கும் ஆடம்பர திருமணங்கள், அந்த திருமணத்தை நடத்தி தரும் ஏஜென்சிகள், இரண்டுக்கும் இடையிலான பிரச்னைகளை காமெடியாக சொல்கிற படம். கல்யாணம், காமெடி, கலாட்டா என்று கலர்புல்லாக தயாராகிறது. இன்று (டிசம்பர் 20) ரிலீசாகும் தூம் 3 படத்துடன் இதன் டிரைலரும் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.