ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த 11வது சர்வதேச திரைப்படவிழா நேற்றுடன் (டிசம்பர் 19) முடிந்தது. மாலையில் அதன் நிறைவு விழா நடந்தது. சர்தேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக தமிழ் படங்களின் போட்டி பிரிவில் 12 படங்கள் போட்டியிட்டன.
இதில் தங்கமீன்கள் சிறந்த படத்துக்கான விருது பெற்றது. அதன் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், விருதும் வழங்கப்பட்டது. இயக்குனர் ராமிற்கு இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், விருதும் வழங்கப்பட்டது. ராம் தனது உதவி இயக்குனர்களுடன் விருதை பெற்றுக் கொண்டார்.
ஹரிதாஸ் படம் இரண்டாம் பரிசு பெற்றது. இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனுக்கும், தயாரிப்பாளர் டாக்டர் வி.ராமதாசிற்கும் விருதும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
நடுவர்களின் சிறப்பு விருதை பரதேசி படத்தில் சிறப்பாக நடித்திருந்த அதர்வா பெற்றார். அமிதாப்பச்சன் இளம் சாதனையாளர் விருதை இசை அமைப்பாளர் அனிருத் பெற்றுக் கொண்டார். ஹரிதாஸ் படத்தில் நடித்த பிருத்விராஜ், தங்க மீன்கள் படத்தில் நடித்த சாதனா ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா வழங்கினார். நடுவர்கள் நடிகை ஸ்ரீப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் விருதுக்குரியவர்களை அறிவித்தனர். விழாவில் இண்டோ அப்ரிசேசன் தலைவர் கண்ணன், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நடிகை சுஹாசினி, அனு ஹசான், ஜெஸி, பூர்ணிமா, ரோகினி, நடிகர்கள் கார்த்தி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.