'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருகிற பிப்ரவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்பூரி மொழி சினிமாக்களைச்சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில், தமிழ் சினிமாவைச்சேர்ந்த சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் விஷால் கேப்டனாக உள்ளார். இதையடுத்து, இந்த அணிக்கு விளம்பரம் செய்வதற்காக, எந்த நடிகையை விளம்பர தூதுவராக நியமிக்கலாம் என்ற பரிசீலணை நடத்தப்பட்டது. அப்போது, அணியைச்சேர்ந்த அனைவருமே த்ரிஷாவுக்கு அந்த வாய்ப்பினை கொடுக்கலாமே என்று ஒருமனதாக முடிவெடுத்தார்களாம்.
இந்த தகவலை அவருக்கு தெரிவித்தபோது, எந்த யோசனையும் இன்றி உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். அதோடு, இந்த சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணியின் தூதுவராக பல ஆண்டுகளாக நான் ஆசைப்பட்டு வருகிறேன். ஆனால் அதற்காக நான் முயற்சி எடுத்தபோதும் கடைசி நேரத்தில் வேறு நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு நழுவிச்சென்று விடும்.
ஆனால், இப்போது அதுவாகவே என்னைத்தேடி வந்திருக்கிறது.இதனால் மிகுந்த சந்தோசத்தில் சென்னை ரைனோஸ் அணியின் விளம்பர தூதுவராகியிருக்கிறேன். பிப்ரவரியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறுகிறார் த்ரிஷா.