ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் பரத்தைப்போலவே சன்னியும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாராம். இருப்பினும் அடுத்தடுத்து இந்தியில் கைமேல் படங்கள் இருப்பதால் புதிய படங்களில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் சன்னி.
இதையடுத்து டினர் அண்ட் லூலு என்ற பெயரில் சன்னி நடித்த ஆக்சன் படமொன்று விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இந்த படத்தில் பாக்சிங் சாம்பியனாக நடித்துள்ள சன்னி, இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று பிரபல பாக்சிங் சாம்பியன் டெர்ரி நோரிஸி என்பவரிடம் முறையாக பயிற்சி எடுத்து நடித்துள்ளாராம்.
மேலும், இந்த பயிற்சிக்காக சென்றபோது, பாக்சிங் மீது சன்னிக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டதாம். அதனால், இந்த கலையை நாமும் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்து இன்னொரு ரூட்டிலும் சம்பாதிக்கலாமே என்று, அதற்கான முன்அனுபவத்தை பெறும் நோக்கில் தற்போது தனக்கு பயிற்சி கொடுத்தவருடன் சேர்ந்து தொழில் பார்ட்னராகியிருக்கிறாராம் சன்னிலியோன். எதிர்காலத்தில் தனக்கு பரிட்சயமான உலகின் பல பகுதிகளில் பிரமாண்டமான பாக்சிங் ஜிம் அமைத்து சைடு பிஸினசை முடுக்கி விட வேண்டும் என்பதுதான் சன்னியின் அடுத்த மாஸ்டர் பிளானாம்.