பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்தவர், ஹனிரோஸ். தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், அவர் நடித்த படங்களின் தோல்வியால், கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால், மலையாளத்துக்கு சென்று, அதிரடி முயற்சி எடுத்த ஹனிரோஸ்க்கு, ஓட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் உட்பட சில படங்கள் கிடைக்க, பின் தமிழை மறந்து விட்டு, முழுநேர மலையாள நடிகையாகிவிட்டார். இருப்பினும், விஜய்யின் தீவிர ரசிகையான அவருக்கு, தமிழ் சினிமாவில் ஹிட்படங்களில் நடிக்க வேண்டும், விஜய்யுடன், டூயட் பாட வேண்டும் என்ற ஆசையே, அளவுக்கதிகமாக உள்ளதாம். அதனால், மீண்டும் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்கான முயற்சி எடுத்து வரும் ஹனிரோஸ், தான் விஜய்யின் ரசிகைஎன்பதையும், அவருக்கு தெரியப்படுத்த, சில அபிமானிகள் மூலம் தூது விட்டு வருகிறாராம்.