ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் படம் ஜில்லா. பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக பொள்ளாச்சி அருகே உள்ள திருமூர்த்தி மலையில் திருவிழா பாடல் படமாக்கப்பட்டது. அதில் படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டு ஆடினார்கள். (ஆல் ஆர்ட்டிஸ்ட் காமினேஷன்) மோகன்லால், காஜல் அகர்வால் இருவரும் விஜய்யுடன் ஆடினார்கள்.
இந்த பாடலின் திடீர் விருந்தினர்களாக வந்தார்கள் நடிகர் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். இருவரும் படத்தை தயாரிக்கும் சூப்பர்குட் ஆர்.பி.சவுத்திரியின் மகன்கள். இந்த பாடலில் அவர்கள் இருவரும் விஜய்யுடன் ஆடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் நேசன் சொல்ல, சவுத்திரியும் அதனை செண்டிமெண்டாக கருதினார். இருவரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து விஜய்யுடன் ஆட வைத்து படம்பிடித்தார்கள். பாடலில் சில விநாடிகளே இடம் பெறும் இந்த காட்சி தியேட்டரில் பரபரப்பு கிளப்பும் என்பது தயாரிப்பாளர், இயக்குனரின் நம்பிக்கை.