Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமின் உயிர்த்தோழியான கத்ரீனா கைப்!

19 டிச, 2013 - 11:48 IST
எழுத்தின் அளவு:

சேது படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த திரையுலகத்தையே தன் பக்கம் இழுத்தவர் சீயான் விக்ரம். அதைத்தொடர்ந்து அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன் போன்ற படங்கள் அவரை வேறு தளத்துக்கு கொண்டு சென்றன. இதில் காசி படத்தைப்பார்க்க சில தெலுங்கு ஹீரோக்களே சென்னைக்கு வந்து தியேட்டரில் அமர்ந்து விக்ரமின் நடிப்பை கண்டுகளித்த ஆச்சர்யங்களும் உண்டு.

அதேபோல், விக்ரமின் இன்னொரு முக்கியமான படம்தான். பிதாமகன். பாலா இயக்கத்தில் அவர் நடித்த அப்படம் விக்ரமிற்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதையடுத்து பாலிவுட்டின் கவனத்துக்கு வந்தார் விக்ரம். அங்குள்ள பல நடிகர்-நடிகைகள் அவரது நடிப்பை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். குறிப்பாக சில நடிகைகள் நேரடியாகவே விக்ரமை தொடர்பு கொண்டு அவரது நடிப்பு குறித்து பாராட்டு மழை பொழிந்தனர்.

அப்படி விக்ரமை பாராட்டியவர்களில் கத்ரீனா கைப் குறிப்பிடத்தக்கவர். பிதாமகன் படத்தில் தன்னை நடிப்பால் விக்ரம் வியக்க வைத்த காட்சிகள் பற்றி விவரிக்கத் தொடங்கிய அவர், பின்னர் விக்ரமின் உயிர்த்தோழியாகிப்போனாராம். இப்போதுவரை இருவரும் அடிக்கடி போனில் நட்பை வளர்த்துக்கொண்டு வருகிறார்களாம். இந்த தகவலை சமீபத்தில் சென்னையில் நடந்த தூம்-3 பிரஸ்மீட் நிகழ்ச்சியில் தெரிவித்த கத்ரீனாகைப்புக்கு, ஒரு தமிழ் படத்திலாவது விக்ரமுடன் ஜோடி சேர்ந்து, போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் மனதளவில் உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Senthil - Bangalore,இந்தியா
20 டிச, 2013 - 18:29 Report Abuse
Senthil விஜய் அஜித் ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் சண்டை போட்டு, ஒரு டுவலிட்டி ஏற்படுத்தி விட்டார்கள். இது எப்படி என்றால், DMK & ADMK மற்றும் காங்கிரஸ் அண்ட் பிஜேபி போல.. மக்கள் அஜித் விஜய் இவர்களை பத்தியே பேச விட்டு வாய் சண்டை போடவிட்டு பெரிய ஆளாகி விட்டார்கள். எங்கே பார்த்தாலும் அஜித்தா அல்லது விஜயா எல்லா ரூம்லேயும் சண்டை. இதனால் தான் விக்ரம், சூர்யா இன்னும் சிலர் போன்ற நடிகர்கள் திறமை இருந்தும் பெரிதாக வர ரொம்ப கஷ்டப் படவேண்டியிருகிறது.
Rate this:
arvind - Chennai  ( Posted via: Dinamalar Android App )
20 டிச, 2013 - 10:53 Report Abuse
arvind people should keep him in top, but he is not recognized for his talents.he should have been in Hollywood, there he would have achieved great heights.
Rate this:
Murali - Pennadam,இந்தியா
20 டிச, 2013 - 06:36 Report Abuse
Murali ஆனா ஒரு நல்ல நடிகனை நாசமாக்கிட்டானுங்க. பீமா , தாண்டவம் இன்னும் சில மட்டமான படங்களால் விக்ரமை காணோம்
Rate this:
Dhurai - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 டிச, 2013 - 22:07 Report Abuse
Dhurai Nice
Rate this:
Deepak Sabastein - Trivandrum,இந்தியா
19 டிச, 2013 - 20:29 Report Abuse
Deepak Sabastein We love u chiyaan....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in