பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோடம்பாக்கத்துக்கு கேரளா தந்த நடிகைகளில் ரம்யா நம்பீசனும் குறிப்பிடத்தக்க நடிகைதான். ஒருநாள் ஒரு கனவு படத்தில் என்ட்ரியான இவர், அதையடுத்து, ராமன் தேடிய சீதை, இளைஞன், ஆட்ட நாயகன், குள்ள நரிக்கூட்டம் என பல படங்களில் நடித்தார். ஆனபோதும் ரம்யாவின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை. அதையடுத்து விஜயசேதுபதியுடன் நடித்த பீட்சா படத்தின் வெற்றி ரம்யா மீது வெளிச்சம் பாய்ச்சியது.
இருப்பினும் பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. விமலுடன் ரெண்டாவது படம் என்ற படத்தில் நடிக்க கமிட்டான ரம்யாவுக்கு அடுத்தடுத்து நான்கு போலீசும் நல்லாயிருந்த ஊரும், டமால் டுமீல் என சில படங்கள் கமிட்டாகின. இந்த படங்களெல்லாமே பிரபலமில்லாத நடிகர்களின் படங்கள்தான் என்பதால், ரெண்டாவது படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் ரம்யா.
பீட்சாவில் திரில்லிங்கான கதையில் நடித்த நான் இப்படத்தில் வித்தியாசமான காமெடி கதையில் நடித்திருக்கிறேன்.இப்படமும் ஹிட்டானால் காமெடி படமெடுக்கும் டைரக்டர்கள் என் பக்கம் திரும்புவார்கள். அதேபோல், விமலுடன் ரொமான்ஸ் காட்சியிலும் புகுந்து விளையாடியிருக்கிறேன். உடலை காட்டி நடிக்காமல் முகத்திலும், கண்களிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருப்பதால், இப்படத்தில் எனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் என்றும் அடித்து சொல்கிறார். ரம்யா நம்பீசன்.