Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புறம்போக்கு படத்துக்காக ஆக்ஷ்ன் ஹீரோயினி தேடுகிறார் ஜனநாதன்!

19 டிச, 2013 - 10:40 IST
எழுத்தின் அளவு:

இயற்கை, ஈ, பேராண்மை படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இந்த படத்தில் முதலில் ஜீவா-ஜெயம்ரவிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர்களை வைத்து படம் பண்ணினால் பட்ஜெட் எகிறும். அதேசமயம் அவர்களுக்கான மார்க்கெட் வேல்யூ அந்த அளவுக்கு இல்லை. அதனால்தான் ஆர்யா-விஜயசேதுபதியை பட்ஜெட்டுக்கேற்ற ஹீரோக்கள் என்று கமிட் பண்ணியிருக்கிறார்களாம்.

இதுவரை தாங்கள் நடித்த கமர்சியல் களத்தில் இருந்து இது மாறுபட்ட கதைக்களம் என்பதால் இவ்விரு நடிகர்களுமே அதிக ஈடுபாட்டுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு கேரக்டர்களின் தன்மைக்கேற்ப இருவருமே தங்களது உடல்கட்டையும் மாற்றிக்கொண்டு நீயா -நானா என்று போட்டிபோட்டு நடிக்கத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், படத்தில் யார் ஹீரோயினியாக நடிக்கிறார்கள்? என்று ஜனநாதனிடம் கேட்டால், இது வழக்கமான கதைகளை மாதிரி இல்லை. பார்ப்பார்கள், காதல் வரும், அடுத்து டூயட், வெளிநாடுகளுக்கு பறப்பார்கள் என்பதெல்லாம் கிடையாது. இரண்டு ஹீரோக்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம். அதேமாதிரி அந்த கதைக்கு தேவையான ஒரு பெண் கதாபாத்திரத்தில் கதாநாயகி வருகிறார். ஆனால், அவர்கள் யாருக்குமே ஜோடி அல்ல. இந்த இரண்டு நடிகர்களையும் மாதிரி அவரும் கதைக்கு தேவையான ஒரு கேரகடர் அவ்வளவுதான்.

அதோடு, பேராண்மை படத்தில் ஜெயம்ரவியுடன் 5 பெண்கள் நடித்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்குமே சண்டை பயிற்சி கொடுத்து படமாக்கினேன். அதேபோல் இந்த படத்தில் நடிக்கும் நடிகைக்கும் ஆக்சன் ரோல்தான். அதனால், புதிதாக ஒரு நடிகைக்கு சண்டை பயிற்சி கொடுத்து படமாக்குவது சரியாக வராது என்பதால், ஏற்கனவே சண்டை பயிற்சி தெரிந்த ஒரு நடிகையாக தேடி வருகிறேன். கூடிய சீக்கிரமே யார் அந்த நடிகை என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
19 டிச, 2013 - 18:49 Report Abuse
Angry ஜெய் கிடைக்கலைனா நீங்களே மீசை தாடியை எடுத்துட்டு நடிச்சிடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in