இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் நான்கைந்து நண்பர்களில் தானும் ஒருவராக நடித்து வந்த பிரேம்ஜி, காமெடியில் கவனத்தை திருப்பி ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் நாளடைவில் வெங்கட்பிரபுவை தவிர மற்ற இயக்குனர்களும் அவருக்கு சான்ஸ் கொடுத்தனர். ஆனால், திடீரென்று பிரேம்ஜிக்கு ஹீரோ ஆசை தலைதூக்கியதால் 2010 பாக்யராஜ் என்ற படத்தில் நடித்தார். அப்படத்தை கவர்ச்சி நடிகை சோனா தயாரித்தார்.
ஆனால் படம் வளர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று பாதியோடு நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஹீரோவாக கோடம்பாக்கத்தில் நானும் ஒரு இடத்தை பிடிக்காமல் அடங்க மாட்டேன் என்று மறுபடியும் சில படங்களில் காமெடியனாக நடித்துக்கொண்டே மாங்கா என்றொரு படத்தில் மீண்டும் ஹீரோவாக ஒப்பந்தமானார் பிரேம்ஜி. அதுவும் இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். என்ன நேரமோ இப்போது அந்த படமும் பாதி வளர்ந்த நிலையில் தள்ளாடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிரேம்ஜி நாயகனாக நடிக்கும் படங்கள் என்றாலே இப்படி அரை கிணறு தாண்டும்போது பைனான்ஸ் ரூபத்தில் ஏதாவது பிரச்னைகள் வந்து விடுவதால் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். அதனால் அடுத்தபடியாக தன்னை நாயகனாக வைத்து படம் தயாரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்ட சில படாதிபதிகள் தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்களாம்.
இதனால் தனக்கும், ஹீரோவுக்கும் ராசியில்லை என்று மறுபடியும் அண்ணன் இருக்கிற தைரியத்தில் அவரது புதிய படங்களில் இன்னும் அதிகமாக வாலாட்ட தொடங்கியிருக்கிறார் பிரேம்ஜி.