‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி. அதன்பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். கரு.பழனியப்பனின் மந்திரபுன்னகை அவர் நடித்த கடைசி படம். அதன் பிறகு வாய்ப்புகள் இன்றி சொந்த ஊரான மும்பைக்குச் சென்று விட்டார். இப்போது துணை முதல்வர், வில்லங்கம் படங்களின் மூலம் திடீர் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். துணை முதல்வர் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள அவரிடம் ஏன் இப்படி திடீர் என்று காணாமல் போய்விட்டீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
மந்திர புன்னகைக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்தது. அவற்றில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. காரணம் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வரும் என் தந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டார். அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்று விட்டேன். இப்போது அவர் பூரண நலம் அடைந்து விட்டார். அதோடு எம்.பி.ஏ படிப்பை பாதியில் நிறுத்தி இருந்தேன். அதையும் முடித்து விட்டேன்.
சரி இனி நடிக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சியில் இறங்கிய மறு வாரமே துணை முதல்வர், வில்லங்கம் படங்கள் அமைந்தது. வில்லங்கம் படத்தில் அடக்க ஒடுக்கமான பெண் கேரக்டர். துணை முதல்வரில் கொஞ்சம் அடாவடியான பெண் கேரக்டர். இரண்டிலுமே நோ கிளாமர். ஆனால் கிளாமராக நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.