பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜயசேதுபதி நாயகனாக நடித்து வெளியான முதல் படம் தென்மேறகு பருவக்காற்று. இந்த படத்தை சீனுராமசாமி இயக்கியிருந்தார். ஆனால், அதன்பிறகு அவரது நடிப்பில் உருவான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன்பிறகு பீட்சாவில் நடித்தார். இதில் பீட்சா முதலில் வெளியாகி மெகா ஹிட்டானது. அதோடு அதையடுத்து அவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களுமே ஹிட்டடித்து விஜயசேதுபதியை உயரமான இடத்தில் உட்கார வைத்து விட்டன.
ஆனால் இந்த வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் பீட்சாதான். அதனால் விஜயசேதுபதியின் சினிமா வாழ்க்கையில் அது முக்கிய படமாகி விட்டது. அதனால் பீட்சா பாணியில் மீண்டும் கதை கேட்கத் தொடங்கிய அவருக்கு கிடைத்திருக்கும இன்னொரு படம்தான் மெல்லிசை.
படத்தின் தலைப்பு மென்மையாக இருந்தாலும் ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாம். முக்கியமாக பீட்சா பாணியில் திரில்லிங்கான மிரட்டல் காட்சிகள் நிறைய உள்ளதாம். அதனால், இந்த படம் தனக்கு இன்னொரு பீட்சாவாக அமையும் என்று எதிர்பார்க்கும் விஜயசேதுபதியின், இந்த மனநிலையை புரிந்து கொண்டு, இப்போது த்ரில்லர் கதைகளுடன் நிறைய புதுமுக டைரக்டர்கள் அவரை முற்றுகையிட்டுள்ளார்களாம்.