டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்த திரைப்பட விழாவில் நமது பொறுமையை ரொம்பவே சோதித்த மற்றொரு படம் டாய்லெட் புளூஸ். நி என்று அழைக்கப்படும் அஞ்சனி என்ற இளம் பெண்ணும் அங்கலி (லி என்று செல்லமாக அழைக்கப்படுகிறாள்) என்ற இளைஞரும் எந்த குறிக்கோளும் திட்டமும் இன்றி கால்போன போக்கில் சுற்றுகிறார்கள். எந்த பயனுமின்றி நி, லி-யை விரும்புகிறாள். வெறும் நட்பா என்பது சந்தேகமாக இருந்தாலும் லி மத சம்பந்த மேல் படிப்பு படித்து பாதிரியராக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறான்.
நியை பின் தொடர்ந்து அவளை வீட்டுக்கு அழைத்து வர துப்பறியும் ஆளை, நியின் தந்தை அனுப்புகிறார். அவரும் நி-யை சந்தேகப்படவில்லை. படம் மெதுவாக நகருகிறது. எதிர்பாராத திருப்பங்கள் தேடினாலும் கிடைக்காது.
அஞ்சனியாக நடிக்கும் அங்க்ரெய்னி ஷெர்லி பார்ப்பதற்கு தோற்றத்தில் நன்றாக இருக்கிறார் என்பது ஒரு ஆறுதல். மூன்று இளைஞர்கள் ஒரு விலைமாதுவை துன்புறுத்தி அனுபவித்து, உடலில் காயம், கீறல் வலியுடன் விட்டும் செல்லும்போது லி, அவளிடம் இதமாக நடந்து கொள்ளும் காட்சிகளில் ஈர்க்கிறார்.
இந்தோனேஷியாவின் ஜாவாவில் பிறந்த டிர்மாவான் ஹட்டாவின் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -