Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வந்துவிட்டது ஆன்லைன் தியேட்டர்!

10 டிச, 2013 - 17:51 IST
எழுத்தின் அளவு:

ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்றைய தினமே இன்டர்நெட்டிலும் வெளியிடும் புதிய திட்டம் ஒன்று நேற்று (டிசம்பர் 9) அறிமுகப்படுத்தப்பட்டது. பாக்கெட் பாப்கார்ன்.காம் என்கிற இணையதள முகவரியில் இனி புதிய படங்களை பார்க்கலாம். இதுபற்றி அதன் தலைமை செயலாளர் சிவகிரி கூறியதாவது: தமிழ்நாட்டில் 2005ம் ஆண்டு கணக்குப்படி 1200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்போது ஆயிரத்திற்கும் குறைவான தியேட்டர்களே உள்ளன. முன்பு 100 முதல் 120 படங்களே ரிலீசானது. இப்போது 200 படங்களுக்கு மேல் ரிலீசாகிறது. அதாவது தியேட்டர் எண்ணிக்கை குறைந்து விட்டது. படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒரு படம் ரிலீசாகி அதுபற்றி மக்களுக்கு சென்று சேரும் முன்பே படம் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் படத்தை தியேட்டரில் வைக்க முடியவில்லை. இதற்கிடையில் திருட்டு விசிடி பிரச்னையும் இருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இண்டர்நெட் தியேட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தயாரிப்பாளர்களிடம் முறைப்படி உரிமம் பெற்ற படத்தை எங்கள் நெட்டில் அப்லோடு செய்து விடுவோம். ரசிகர்கள் வீட்டில் இருந்தே அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி படத்தை பார்க்கலாம். செலுத்தும் கட்டணத்தில் பெரும்பகுதி படத்தின் தயாரிப்பாளருக்கு போய்ச்சேரும். எதிர்காலத்தில் இந்த இண்டர்நெட் தியேட்டர்கள்தான் நிலையானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

sivasaravanan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2013 - 10:58 Report Abuse
sivasaravanan கண்டிப்பாக நல்ல பலன் உண்டு
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
11 டிச, 2013 - 10:49 Report Abuse
Vaal Payyan இத தானேயா கமலஹாசன் சொன்னாரு ... பிச்சி மெய்ஞ்சிடீங்க ...
Rate this:
Prabakar Rathish - Chennai,இந்தியா
11 டிச, 2013 - 10:12 Report Abuse
Prabakar Rathish இனி இது தான் தயாரிப்பர்களின் அபிமான திரை அரங்கம் .
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
11 டிச, 2013 - 09:19 Report Abuse
அப்பு மக்கள் தியேட்டருக்கு வருவது முன்ன விட குறைவு....பல படங்களுக்கும் இப்போது வசூல் பிரச்சனை....மக்கள் வீட்ட விட்டு அல்லது வேலைகள விட்டு தகுந்த நேரத்துக்கு வெளியே தியேட்டருக்கு போக பிரச்சனையா இருக்கலாம்...ஐ டி ல பணி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க...நிறைய பேர் காசு கிரடிட் கார்ட் இருக்கு ஆனா வெளியே போயி படம் பாக்கனு நேரம் செலவழிக்க மனசோ மற்ற பிசினஸ் பளுவில் நேரமோ இல்ல...இப்படியாபட்டவங்க கிட்ட இன்டர்நெட் மூலமா படத்தோட டிக்கட்ட வியாபாரம் செய்யலாம்....ஆன் லைன்ல பாக்கிற டிரண்டு கிரியேட் பண்ணி லாபம் சம்பாரிக்க திரை துறை முயற்சி செய்யுது.
Rate this:
p.raj-chennai - chennai,இந்தியா
11 டிச, 2013 - 06:44 Report Abuse
p.raj-chennai இதைதான் கமல்ஹாசன் செய்ய துணிந்தார் ?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in