இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நடிகர் ஜெயம் ரவி, தான் காதலித்த பெண்ணையே கல்யாணம் முடிக்க இருக்கிறார். ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி, தற்போது பேராண்மை படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அதனை மறுத்து வந்த ஜெயம் ரவி, இப்போது தனது காதலியையே கரம் பிடிக்கப் போகிறார்.
மணமகள் ஆர்த்தியும், ஜெயம் ரவியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஸ்காட்லாந்தில் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படித்துள்ள ஆர்த்தி, தமிழ் பட அதிபர் விஜயகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பேராண்மை பட சூட்டிங் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.