Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

இன் ஹைடிங் போலாந்து படம் - கோவா திரைப்பட விழா ஸ்பெஷல்

09 டிச, 2013 - 17:52 IST
எழுத்தின் அளவு:

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் போலாந்து நாட்டில் ஒரு சிறு நகரத்தில் நடைபெறும் கதை. தன் தாயின் மரணத்திற்கு பிறகு தன் தந்தையுடன் வசிக்கிறான் ஜனைனா என்ற இளம் பெண். தன் நண்பரின் மகள் எஸ்தர் என்ற இளம் பெண்ணிற்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். முதலில் ஜனைனாவிற்கு, எஸ்தர் அவர்கள் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை என்றாலும் பின்னர் எஸ்தருடன் நட்பாகிறாள். வீட்டிற்குள் சுரங் அறைக்குள் எஸ்தர் தங்குகிறாள். வெளியே எங்கும் வர முடியாது. வெளியே ராணுவத்தினருக்கு தெரிந்துவிட்டால் எஸ்தர் உயிருடன் இருக்க முடியாது. வீட்டிலேயே சிறு ஹோட்டல் மாதிரி நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் ஜனைனாவின் தந்தையை ராணுவம் கைது செய்து அழைத்து செல்கிறது. இனி அந்த பெண்கள் மட்டும் தான்.

இரு பெண்களும் நெருக்கமாகிறார்கள். உங்களைத் தவிர வேறு யாரோ இந்தி வீட்டில் வசிக்கிறார்கள், சத்தம் கேட்கிறது என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து ஜனைனாவிடம் விசாரிக்கிறார்கள். என்னை தவிர யாரும் இல்லை என்று அடித்து சொல்லி விடுகிறாள். இதற்கிடையே இந்த வீட்டில் இன்னொரு பெண் இருப்பது எனக்கு தெரியும் என்று சொல்லி, அண்டை வீட்டுக்காரர் உள்ளே வந்து சுரங்க அறைக்கு செல்ல முயற்சிக்கிறார். ஜனைனாவும், எஸ்தரும் அவருடன் சண்டை போடுவார்கள். ஜனைனா பேஸ் என்ற இசைக்கருவியின் கூரான முனையில் அவரை தாக்க அவர் இறந்து போகிறார். அவர் உடலை ஒரு கம்பளத்தில் சுற்றி நள்ளிரவில் எடுத்து சென்று பாதாள சாக்கடையில் தள்ளி விடுகிறார்கள்.

சில நாட்கள் கழித்து, இறந்த இளைஞரின் போட்டோவை காண்பித்து இந்த இளைஞரை சில நாட்களாக காணவில்லை, உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று அதிகாரிகள் வீட்டுக்கு வந்து விசாரிக்கிறார்கள் ஒரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன் வேறு ஒன்றும் தெரியாது என்று ஜனைனா சொல்லி விடுகிறாள்.

முதலில் எஸ்தருடன் அதிகம் பேசக்கூட செய்யாத ஜனைனா பின்னர் நெருக்கமாகிறாள். சுரங்க அறைக்குள் சென்று எஸ்தருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். இளைஞர் மரணம் பற்றி விசாரணைக்கு மீண்டும் ஜனைனா அழைக்கப்படுவார். தான் அவரை கொலை செய்ததை ஜனைனா ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்து விடுவார். போர் நின்றதும் போலந்தை விட்டு வெளியேறி சுதந்திரமாக வாழ வேண்டும் என்று எஸ்தர் விரும்புவார்.

ராணுவத்தால் எப்போதும் ஆபத்து வரலாம், எஸ்தரை வீட்டில் சட்ட விரோதமாக ஒளித்து வாழ வைப்பது தெரிந்தால் ஆபத்து ராணுவம் தங்கள் வீட்டை தங்களுக்காக எடுத்துக் கொள்ளலாம், இரு பெண்கள் வேறு துணை இன்றி வாழ்வது சிரமம், தினமும் ஆபத்தின் விளிம்பில் ஜனைனா வாழ்ந்து கொண்டிருப்பதால் ஒரு பயமும், இறுக்கமும் எப்போதும் அவரிடம் இருக்கும்.

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்கான வந்த படங்களில் இன் ஹைடிங் படத்தில் ஜனைனா சிறப்பாக நடித்தற்காக போலந்தை சேர்ந்த நடிகை போக்ஸர்ஸா மாக்டலினாவிற்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதும், பத்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.

ஜனைனா, எஸ்தர் இருவரின் பாத்திரங்களுமே கனமான மாறுபட்ட பாத்திரங்கள். கருப்பு, வெள்ளை படம். இரண்டாம் உலகப்போரின் போது நடக்கும் கதை என்பதால் கருப்பு, வெள்ளையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.

- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

chakkaravarthi - chennai  ( Posted via: Dinamalar Windows App )
09 டிச, 2013 - 23:51 Report Abuse
chakkaravarthi INHIDING IS NOT A BLACK AND WHITE MOVIE, ITS COLOUR PERIOD FILM, CINEMATOGRAPHY WAS EXCELLENT IN THE MOVIE, WRITER CONFUSED WITH SUM OTHER MOVIE, THATS IS WRONG INFORMSTION.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in