Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்னணி நடிகைகளுக்குஷாக் கொடுக்கும் ஸ்ரீதிவ்யா

04 டிச, 2013 - 01:57 IST
எழுத்தின் அளவு:

நஸ்ரியா திரைக்கு வந்தபோது, முன்னணி நடிகைகளுக்கு கொடுத்ததை விட, அதிகப்படியான ஷாக் கொடுத்து வருகிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா.காரணம், பென்சில் படத்துக்கு ப்ரியா ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென, அவரை விட ஸ்ரீதிவ்யா நன்றாக இருப்பார் போலிருக்கே என்று, இவரை புக் பண்ணினர்.அதேபோல், சுந்தர்.சி, இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தின் முதல் பாகத்தில், விமலுக்கு ஜோடியாக அஞ்சலி தான் நடித்திருந்தார். ஆனால், இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், விமலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம்.

இதுகுறித்து, சுந்தர்.சி, தரப்பில் இன்னும் செய்தி வெளியிடப்படாத போதும், அஞ்சலி இப்போதைக்கு தமிழுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், ஸ்ரீதிவ்யாவுக்கே சாதகமான சூழ்நிலை உள்ளது என்கின்றனர். ஸ்ரீதிவ்யாவின் இந்த அசுரவேக வளர்ச்சி, மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கோலிவுட்டில், பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களின் கதைகளை தேர்வு செய்வதில், ரொம்பவும் கவனமாக இருக்கிறாராம், ஸ்ரீதிவ்யா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
04 டிச, 2013 - 16:20 Report Abuse
GUNAVENDHAN அங்காடித்தெரு படத்தை பார்த்தபோது எப்படி அஞ்சலி விரைவில் சினிமாவில் வேகமாக வளருவார் என்று தோன்றியதோ அதேபோல , வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீவித்யாவை பார்த்த மாத்திரத்திலேயே நாம் படம் எடுக்ககூடியதாக இருந்தால் இந்த பெண்ணை தான் புக் செய்யவேண்டும் என்று நினைத்தேன் , அந்த அளவுக்கு முதல் பார்வையிலேயே அசத்தும் பெண் ஸ்ரிவித்த்யா . வேகமாக வளருவார் , அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை .
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
05 டிச, 2013 - 20:19Report Abuse
தலைநகர தமிழன் நடிகை பேரு ஸ்ரீதிவ்யா ஸ்ரீவித்யா அல்ல...
Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
04 டிச, 2013 - 13:55 Report Abuse
JAY JAY உண்மை தான்.. நடிகைகளுக்கு புன்னகை ரொம்ப முக்கியம் .. சில நடிகைகள் வாய் விட்டு சிரிப்பார்கள், அவர்களும் பிரபலம் ஆகியுள்ளனர்.. உதாரணமாக பானுமதி, பத்மினி, ஜெயலலிதா, ஜெயசித்ரா,,ஸ்ரீப்ரியா ராதிகா, அசின் போன்றவர்களை குறிப்பிடலாம்.. இவர்கள் அனைவரது நடிப்பும் ஆர்பாட்டமாக இருக்கும்... ஆர்பாட்ட நடிப்பில் இவர்கள் அசத்தியிருப்பார்கள்.. ஆனால் இன்னொரு வகையான நடிப்பு உள்ளது... அமைதியாக சிரித்து ஸ்கோர் பண்ணுவது அந்த வகையில் சாவித்திரி, KR விஜயா, சரோஜாதேவி, ஸ்ரீதேவி, ஜோதிகா, நயன்தாரா போன்றவர்களை சொல்லலாம்.... இவர்கள் சிரிப்பில் கண்களும் பேசும்... கண்களாலேயே ரசிகனை வசியம் பண்ணுவார்கள்.. இந்த அமைதியான சிரிப்பு மற்றும் கண்களால் வசியம் பண்ணும் கலை , நீங்கள் மேலே கூறிய புதுவரவு ஸ்ரீதிவ்யாக்கு உள்ளது.. .ஒரு பாடலில் கொடுக்கும் முகபாவனையிலேயே அதனை கணித்து விடலாம்.. அந்த படத்தில் வரும் " பார்க்காதே பார்க்காதே " பாடலில் ஸ்ரீதிவ்யாவின் முகபாவனை மற்றும் சிரிக்கும் ஸ்டைல் அவரை ஒரு சிறந்த வருங்கால நடிகையாக அடையாளம் காட்டுகிறது,.. கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும், உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதிலும் அக்கறை செலுத்தினால் , இவரால் சினிமாவில் சாதிக்க முடியும் என்றே தோனுகிறது...
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
05 டிச, 2013 - 20:20Report Abuse
தலைநகர தமிழன் சிரிப்புல இத்தனை வகைகள் இருக்கிறதா ?...
Rate this:
LAX - Trichy,இந்தியா
04 டிச, 2013 - 10:51 Report Abuse
LAX வாழ்த்துக்கள் ஸ்ரீதிவ்யா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in