Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

டான் ஆப் பிலிம் மேக்கர் தி கெய்ஷீகே கினோஷிடா - கோவா பட ஸ்பெஷல்!

03 டிச, 2013 - 14:38 IST
எழுத்தின் அளவு:

ஜப்பானிய திரைப்படங்கள் என்றால் நமக்கு முதலி்ல் ஞாபகம் வருவது, உலகப்புகழ்பெற்ற ஜாப்பானிய இயக்குனரும், விஷேச ஆஸ்கர் விருது பெற்ற அகிரா குரோஸாவாதான்! குரோஸா இயக்கிய 'செவன் சாமுராய்' என்ற படம் ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஹிட்டான தி மாக்னிபிஷியண்ட் செவன்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. அகிரா குரோஸாவாவிற்கு அடுத்து ஜப்பானில் மிகவும் போற்றப்படும் டைரக்டர் கெய்ஷீகே கினோஷிடா. தி ஆர்மி, லைட் ஹவுஸ், இம்மார்ட்டல் லவ், கேர்ள் ஐ லவ் டூ, கார்மன் கம்ஸ் ஹோம், தி யங் லேடி, மிக் ஜாய்ஸ் ஸ்மால் சாரோஸ், ப்ரோக்கன் ட்ரீம்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உலகப் புகழ்பெற்றவர். அவருடைய வாழ்க்கை சித்திரம் தான் இந்தப்படம்.

இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் போது கினோஷிடா தொடர்ந்து திரைப்படம் இயக்க பிரச்னை வருகிறது. தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, படுத்த படுக்கையாய் கிடக்கும் தன்னுடைய தாயை பார்க்க மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார். போரில் அந்தப்பகுதி தாக்கப்படும் என்பதால் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு இடத்திற்கு செல்வது உயிருக்கு பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். கரடுமுரடான பாதையில் படுத்த படுக்கையாக உள்ள தன் தாயயை காரில் வைத்து கொண்டு செல்ல முடியாது என்பதால் ஒரு கை வண்டியை வைத்து அவ்வளவு தூரம் இழுத்த செல்ல முடிவு செய்கிறார். தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரும் இது முடியுமா, சாத்தியமில்லை என்று கூறினாலும் ஒல்லியான உடல்வாகு கொண்ட கினோஷிடா, தன் முடிவில் தீவிரமாக இருக்கிறார்.

மலைப்பாதையில் அம்மாவை வண்டியில் வைத்து இழுத்து செல்கிறார். கொட்டுகிற மழையையும் பொருட்படுத்தாமல் உள்ளத்தை நெருடும் காட்சிகள், இரவு வழியில் ஒரு விடுதியில் தங்குகிறார்கள். மீண்டும் பயணம் தொடர்ந்து தங்கள் இலக்கை அடைகிறார்கள். அவர்கள் லக்கேஜை மற்றொரு வண்டியில் இழுத்து வரும் கூலித்தொழிலாளி இளைஞன் இவர்களோடு நெருக்கமாகிறான். 'தி ஆர்மி' என்ற ரொம்ப நல்ல படம், அதை பார்த்திருக்கிறீர்களா...? என்று கினோஷிடாவை கேட்கிறான். அதற்கு தான் இயக்கிய படம் தான் என்று சொல்லாமல் பார்த்திருக்கிறேன் என்று மட்டும் கூறுகிறார் கினோஷிடா. அதில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு தாய், போருக்கு செல்லும் தன் மகனை அணிவகுப்பில் நடந்து வரும்போது பார்க்க ஓடி வருவாள். மகனும், தாயும் பார்த்து கொள்வார்கள். தனியே பேச முடியாது. அணிவகுப்பினுடனே தாய் ஓடி வருவாள். மறக்க முடியாத காட்சி. தாய் பாசத்தை விட சிறந்தது இல்லை என்று பாராட்டுவார். பதிலுக்கு கினோஷிடா கொடுப்பது இரண்டு சொட்டு கண்ணீர் மட்டும் தான்!

யுத்த அபாயம் நீங்கி, தங்கள் ஊருக்கு குடும்பம் திரும்புகிறது. அம்மா, சகோதரர், குடும்ப பெண்கள் அனைவரும் அவரிடம் ''உனக்கு உள்ள திறமையை வீணாக்காதே மீண்டும் சென்று நல்ல நிறைய படங்களை டைரக்ட் செய்து, எங்களுக்கு பெருமை கொண்டு வா'' என்று கேட்பார்கள். அவர்கள் சொல்லை ஏற்றி கினோஷிடா தனியாக கிளம்புவார். அவர் இயக்கிய பல சூப்பர் ஹிட் படங்களின் முக்கிய காட்சிகளின் தொகுப்பை படத்தில் கொடுக்கிறார்கள். அத்ததுடன் படம் முடிகிறது.

இயக்குனர் கினோஷிடாவிற்கு இந்த படத்தின் மூலம் அழியாப்புகழ் சேர்த்திருக்கும் டைரக்டர் கீச்சி ஹராவின் இந்த முயற்சியை பாராட்டலாம். கினோஷிடாவாக நடித்திருக்கும் நடிகர், அடக்கமிக்க ஜீனியஸாக தன் கதாபாத்திரத்தை பொருத்தமாக செய்திருக்கிறார். கூலித் தொழிலாளியாக வரும் இளைஞனும் தன் பங்கிற்கு நன்றாக நடித்திருப்பதோடு, காமெடியில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக அந்த கூலித்தொழிலாளி கினோஷிடாவின் அம்மாவிடமிருந்து விடைபெறும்போது என் தாயையும் இனி நன்றாக பார்த்துக் கொள்வேன், மிகுந்த பாம் காட்டுவேன் என்று கூறி செல்லும் காட்சிகளிலும் அவர் மிளிர்ந்திருக்கிறார்.

- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in