Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

03 டிச, 2013 - 10:45 IST
எழுத்தின் அளவு:

இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.

இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ அந்த உருவத்தை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் இந்த உருவங்களுக்கு, வடிவங்களுக்கு தனித்தனியான தத்துவங்களும், உருவாக்கங்களும், நம்பிக்கைகளும், வணங்குவதற்குரிய மரியாதையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை சினிமா செய்து வருகிறது.

இந்துக்கள் தாங்கள் வணங்கும் தெய்வ உருவங்கள் மீது எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் வழியே தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரே விஷயம், நம்பிக்கை. அந்த நம்பிக்கை வழியிலான வாழ்க்கை.

இந்துக்கள் தங்கள் தெய்வங்கள் பற்றி புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் வழியாக படித்து தெரிந்த கொண்டார்கள். படிக்க முடியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தெருக்கூத்து, நாடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்டார்கள். இதன் அடுத்த கட்டமாக வந்த சினிமாவில் அதை நேரடியாகவே பார்த்தார்கள். கருப்பு வெள்ளை காலம் தொட்டு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் காலம் வரை சினிமா இந்துக்களின் தெய்வங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தெம்பூட்டுவதாக, உறுதிப்படுத்துவதாக இருந்தது.

ஆனால் எமனுக்கு எமன், அதிசய பிறவி என இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பை கிண்டல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அதன் போக்கு மாற ஆரம்பித்தது. அது சமீபத்தில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் வரை தொடர்கிறது.

இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.

ஒரு மதத்தின் எதிர்காலம் அதன் புனிதம் காப்பதில், நம்பிக்கை காப்பதில் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (54) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (54)

Sundar - Singapore,சிங்கப்பூர்
04 டிச, 2013 - 13:58 Report Abuse
Sundar நானும் மத நம்பிக்கை இல்லாதவன் தான். ஆனாலும் இதை ஒரு சாதாரண விசயமாக எடுத்துகொள்ள முடியவில்லை. ஏன் இந்து மத கடவுள்களை மட்டும் கிண்டல் செய்கிறிர்கள்? இந்துக்கள் தான் சகிப்பு தன்மை அதிகம் உள்ளவர்கள், எதுவும் சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
04 டிச, 2013 - 13:38 Report Abuse
JAY JAY நாம் பிறக்கும் போது, எந்த மதத்தில் பிறக்கிறோமோ, அல்லது நமது பெற்றோர் எந்த மதத்தை நம்முள் ஊட்டி வளர்கிறார்களோ அந்த மதத்தையே நாம் பின்பற்றி வருகிறோம்.. இந்து மதத்தில் உள்ள குறை பாடுகள்.. 1. பிற மதத்தில், ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அல்லது தர்க்காவின் உள்ளே யார் நுழைந்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் பாவிக்க படுகிறார்கள்.. இந்து கோவில்களில் அப்படி இல்லை...ஜாதி, வேறுபாடுகள் மட்டும் அல்ல, இலவச தரிசனம், கட்டண தரிசனம் , பரிவட்டம், முதல் மரியாதை போன்ற விஷயங்கள் எல்லாம் கோவில்களில் உள்ளது நன்றாகவா உள்ளது? 2. ஒரே கடவுள் என்ற போதனை தான் மற்ற மதங்களில்...ஆனால் இந்து மதத்தில் பல கடவுள்கள், ..அதிலும் அவர்களில் யார் பெரியவர்கள் என்று சண்டை போட்டு கொள்வதாகவே பலபல பழைய படங்களிலும் கூட காட்டியுள்ளார்கள்.. 3. பலர் குல தெய்வங்களை தான் இன்றும் வழி படுகின்றனர்... சைவ , வைஷ்ணவ சித்தாந்தங்கள் பலருக்கும் இன்றும் புரிவதில்லை.. 4. இங்கே பலரும் எழுதியுள்ளது போல, கோவில் திருவிழாக்களில் குத்தாட்டம் போடுவது நடைமுறையில் உள்ளது..கிராமங்களில் மட்டும் அல்ல, சென்னையில் கூட ஆடி மாசம், கோவில் திருவிழாக்களில் குத்து ஆட்டம் மட்டும் அல்ல..ஆபாச நடனங்களும் நடக்கின்றன... இதனை யாரும் மறுக்க இயலாது... 5. புள்ளையாரை பல வகைகளில் உருவாக்குகிறார்கள்.. கடலில் கரைப்பதற்கு கிரிக்கெட் புள்ளையார் என்றெல்லாம் செய்து ஊர்வலம் யார் நடத்துகிறார்கள்? அது மட்டும் அல்ல, வழிவிடு விநாயகர், பேருந்து விநாயகர் என்றெல்லாம் பல பல சிறு கோயில்கள் தெரு முழுக்க உள்ளன...6. கோவில் விழாக்களில் குடித்து விட்டு , ஆடுவது வேறெந்த மதத்திலும் காண முடியாது.. 7. எல்லாவற்றையும் விட கொடுமை.. ஒருவர் இறந்த பின் சவ ஊர்வலத்தில் குடித்து விட்டு குத்தாட்டம் போடுவது.. இது உலகின் எந்த மதத்திலும் கிடையாது... 8 .இதையெல்லாம் கட்டு படுத்தாமல், ஒழுங்கு படுத்தாமல், திரைப்பட துறையினரை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுவது முறையற்றது..
Rate this:
Vijay - Sydney,ஆஸ்திரேலியா
18 டிச, 2013 - 08:19Report Abuse
Vijayஉங்களுக்கு தெரியாததால் அவை தவறு என்று அர்த்தம் கொள்வது முட்டாள் தனம்...
Rate this:
karthick - muscat,ஓமன்
04 டிச, 2013 - 13:09 Report Abuse
karthick கடவுள் பக்தி இல்லாதவனுக கடவுள கிண்டல் பன்னுரவணுக இந்த படத்தை ஏத்துக்குவாங்க.
Rate this:
D. Poungode - Puducherry,இந்தியா
04 டிச, 2013 - 13:03 Report Abuse
D. Poungode மத நம்பிக்கையை கேலி செய்து படம் எடுத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
Rate this:
senthil kumar - kuala lumpur,மலேஷியா
04 டிச, 2013 - 10:12 Report Abuse
senthil kumar இந்துக்கள் எதையும் சகித்து கொள்வதால் இந்த மாதிரி மட்டமான சிந்தனை உள்ள படங்கள் வெளிவருகிறது, இதை கண்டிக்க வேண்டும். இதை ஏன் தடை செய்ய வில்லை???
Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in