Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவை எனக்கு மட்டுமல்ல; எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் : அனுஷ்கா

02 டிச, 2013 - 23:46 IST
எழுத்தின் அளவு:

அருந்ததீ படம் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா சமீபகாலமாக சவாலான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபாலி போன்ற சவாலான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இரண்டாம் உலகம் படம் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி...

* இரண்டாம் உலகம் படத்தில், சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளீர்களே?

ஆமாம், அது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஜார்ஜியாவில் உள்ள சண்டை பயிற்சி மாஸ்டரிடம், 15 நாட்கள் பயிற்சி எடுத்து, சண்டை காட்சிகளில் நடித்தேன். படம் பார்த்த பலரும், இதற்காக, எனக்கு பாராட்டு தெரிவித்தனர்.

* ஆர்யாவிற்கு யோகா சொல்லிக் கொடுத்தீங்களாமே?


நான் ரொம்ப வருஷமா யோகா கத்துக்கிட்டிருக்கேன், அப்பப்போ நிறைய பேர் கேட்பாங்க. கொஞ்சம் சொல்லி தருவேன். ஆனால், ஆர்யாவுக்கு சொல்லிக் கொடுத்ததாக கூறுவது பொய். ஆர்யா என்னை விட பிட்டா இருக்கார், உடற்பயிற்சி செய்து, உடம்பை சரியா வச்சிட்டு இருக்கார்.எதுக்கு அவருக்கு நான் சொல்லித் தரணும்? அது வெறும் வதந்தி தான்.

* ஆர்யாவும், நீங்களும் நல்ல நெருக்கமான நட்பில்இருக்கீங்க. நயன்தாராவும் இருக்காங்க எப்படி இது?

உண்மையா சொல்லணும்னா, ஆர்யா பற்றி நிறைய பேர் ஏதேதோ சொல்வாங்க. ஆனா, ஆர்யா ரொம்ப நல்ல நண்பர். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். அவருடன் முதல் முதலா நடிக்கும்போது, அவரின் கடுமையான உழைப்பை பார்த்து, ஆச்சரியப்பட்டேன். நிச்சயம் ஆர்யாவை எல்லா பெண்களுமே விரும்புவாங்க. அவ்ளோ நல்ல கேரக்டர் ஆர்யா. அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு, ரொம்ப ஒத்துழைப்பு கொடுப்பார்.

* தமிழ் ரசிகர்கள் உங்ககிட்டே என்ன எதிர்பார்க்குறாங்கனு நினைக்கிறீங்க?

என் முகம், அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பிடிச்சிருக்கு, அது இல்லாம, ஒரு நல்ல சினிமாவை தான் அவங்க விரும்புறாங்க. அது அனுஷ்கானு இல்ல, வேறு யாரா இருந்தாலும்.

* தமிழில் குறைவாகவும், தெலுங்கில் அதிக படங்களிலும் நடிக்கிறீங்களே?

அப்படி எல்லாம் இல்லை. இரண்டு மொழிகளிலும் கதை கேட்கிறேன். எந்த கதை எனக்கு பிடிக்குதோ, அதை ஒத்துக்கிறேன். மற்றபடி, இரண்டு மொழிகளுமே எனக்கு பிடித்தது தான்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

04 டிச, 2013 - 16:53 Report Abuse
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) நுனி மொன்னையா போன சமாச்சாரம் எல்லாம் உன்னமாதிரி நடிகைகளுக்கு பிடிக்கும் போலிருக்கு ....... கலிகாலம்டா
Rate this:
LAX - Trichy,இந்தியா
03 டிச, 2013 - 18:39 Report Abuse
LAX யூ டூ அனுஷ்..?
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
03 டிச, 2013 - 13:18 Report Abuse
அப்பு ஆரியாவை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.மற்ற கதாநாயகர்களை பிடிக்காதா?இல்லை ஆரியா செய்யும் ஆந்திர மசாலா பிரியாணி கம கம தான் காரணமா?
Rate this:
சுளுக்கு கனகராஜ் - TAMILNADU,இந்தியா
03 டிச, 2013 - 08:44 Report Abuse
சுளுக்கு கனகராஜ் ஐதராபாத் பிரியாணி செஞ்சி குடுக்கும் ஆர்யாவுக்கு எந்த மசாலா பெண்களுக்கு தான் பிடிக்காது?மச்சக்காரன் ஆரியா.
Rate this:
prabu - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2013 - 07:48 Report Abuse
prabu அப்படியா அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமே
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in