விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இந்தியில் ஷாரூக்கான் நடித்த ஓம் சக்தி ஓம் படத்தை இயக்கியவர் பராகான். இவர் தற்போது ஷாரூக்கானுடன், அபிஷேக்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரையும் இணைத்து ஹேப்பி நியூ இயர் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பிரபுதேவாவுடன் ஒரு நடனம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தனது விருப்பத்தை இயக்குனரிடம் தெரிவித்தாராம் ஷாருக்கான்.
அதையடுத்து, பிரபுதேவாவிடம் இயக்குனர் பேச, எந்த யோசனையும் இன்றி உடனே சம்மதம் சொல்லி விட்டாராம். தற்போது இந்தியில் பிரபல டைரக்டர் என்கிற அளவுக்கு முன்னணியில் இருக்கும் பிரபுதேவா, தனது முதல் அடையாளமான நடனத்தை தான் இயக்கும் படங்களில் தோன்றி வெளிப்படுத்தி வருவதால், அவரது நடனத்துக்கும் பாலிவுட்டில் ஒரு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளதாம்.
அதனால்தான் பிரபுதேவாவும் தனது படத்தில் இடம்பெற்றால் அதுவே படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று கருதினாராம் ஷாரூக்கான். இது ஷாரூக்கானின் தனிப்பட்ட விருப்பம் என்பதால், தான் பிசியாக இருந்தபோதும் அவர்கள் சொன்ன நாளில் சென்று ஆடிக்கொடுத்திருக்கிறாராம் பிரபுதேவா.