Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் பின்வாங்கியதால் அந்த கேப்பில் நுழைகிறார் வைகைப்புயல் வடிவேலு!

02 டிச, 2013 - 14:08 IST
எழுத்தின் அளவு:

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார். தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக நடித்துள்ளாராம். ஏற்கனவே தான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை விடவும் இப்படம் பெரிய வசூல் சாதனை புரியும் என்று முழு திருப்தியில் இருக்கிறாராம் வடிவேலு.

ஆனால், இதுவரை தெனாலிராமன் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவது பற்றி யோசிக்காமல இருந்தவர்கள், இப்போது பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெளியாவதாக இருந்த ரஜினியின் கோச்சடையான் பின்வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால், அந்த படத்துக்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

ஏறகனவே விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் வெளியாவது உறுதியாகி விட்டபோதிலும், கதை மீதும், தனது நடிப்பின் மீதும் உள்ள நம்பிக்கையில் துணிந்து களமிறங்குகிறாராம் வடிவேலு. அதனால் முதல்கட்டமாக முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே விஜய்,அஜீத் படங்களை வெளியிடுபவர்களும் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்களை தங்கள் பக்கம் இழுக்கும் அதிரடி முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 டிச, 2013 - 07:51 Report Abuse
Sundar We missed the veteran for the past two years. His outstanding comedy scenes are refreshing the viewers who are tired and in tension.
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
03 டிச, 2013 - 13:23 Report Abuse
அப்பு வடிவேலு வெற்றி பெற வாழ்த்துக்கள்.மீண்டும் வடிவேலுவின் கலக்கல் காமடிகளை கண்டுகளிக்க மிக ஆவலாக உள்ளோம்.
Rate this:
kuma6 - tuticorin  ( Posted via: Dinamalar Windows App )
03 டிச, 2013 - 10:44 Report Abuse
kuma6 தல யுடன் மோது எங்க தளபதி யுடன் மோதாதே
Rate this:
Ram Prabhu - Chennai,இந்தியா
03 டிச, 2013 - 09:39 Report Abuse
Ram Prabhu எனக்கு என்னவோ ஜில்லா/வீரம் வசூலை விட உமது படத்துக்கு நல்ல வசூல் வரும்னு தோணுது பெரியவர்கள்/சிறியவர்கள்னு எல்லாரும் பார்க்கலாமே இரட்டை அர்த்த ஆபாச காமெடி இருக்காது தெனாலிராமன் கதையே சுவாரஸ்யமா இருக்கும் இதுல வடிவேலு வேற முதல் நாள் முதல் ஆட்டம் தான்
Rate this:
D.KUMAR - Trichy,இந்தியா
03 டிச, 2013 - 09:11 Report Abuse
D.KUMAR இனியாவது தலை கனத்துடன் பேசாமல் அடக்கமாக இருந்தால் நல்லதுதான்.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in