தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேசும் படம், பேசாத படம், படம் பேசும், சுட்ட படம், சுடாத படம், ரெண்டாவது படம் என்ற பெயரில் பல படங்கள் ரெடியாகி வருகிறது. இந்த வரிசையில் அடுத்து சேர்ந்திருக்கிறது கள்ளப்படம். மிஷ்கின் உதவியாளர் ஜெ.வடிவேல் டைரக்ட் செய்கிறார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஸ்ரீ ராம சந்தோஷ் இதில் ஒளிப்பதிவாளராக புரமோஷன் ஆகிறார். கே மியூசிக். இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார்.
படத்தின் துவக்க விழாவில் மிஷ்கின், முதல் மூன்று காட்சிகளை இயக்கி சிஷ்யனை வாழ்த்தினார். அதே காட்சிகளுக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து தன் சிஷ்யனை வாழ்த்தினார். படத்தின் கதை என்ன? என்று டைரக்டர் வடிவேலுவை கேட்டால். "குரு நாதர் பாணியிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். பெயரிலேயே கள்ளம் இருப்பதால் இப்போதைக்கு கதை சீக்ரெட்" என்று சிரிக்கிறார்.