Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாணி படத்தை எதிர்நோக்கியிருக்கும் யுவன்ஷங்கர்ராஜா!

30 நவ, 2013 - 17:14 IST
எழுத்தின் அளவு:

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்ஷங்கர்ராஜா. இளையராஜாவின் இளைய மகனான யுவனை, அப்படத்தை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் சிவா இசையமைப்பாளராக்கினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்ததால் சினிமாவில் முத்திரை பதித்தார் யுவன்.

அதையடுத்து பிசியான அவர், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இப்போது கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட பெருமையை பெறுகிறார். அதோடு, தனது நூறாவது படத்தின் இசை பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாடல் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் யுவன்.

அதனால், தனது முதல் படத்தின் ரிலீசுக்கு எத்தனை எதிர்பார்ப்போடு காத்திருந்தாரோ அதேபோல், இப்போது பிரியாணி ரிலீசையும் எதிர்நோக்கியிருக்கும் யுவன், டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் பிரியாணி படத்தின் இசையை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை சென்னையிலுள்ள ஒரு பிரதான தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளப்போகிறாராம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:53 Report Abuse
தலைநகர தமிழன் யுவனுக்கு மேலும் பல வெற்றிகளை குவிக்க பல வெற்றி படங்களில் பங்கெடுக்க வேண்டும்
Rate this:
Murali Yuga - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2013 - 23:42 Report Abuse
Murali Yuga புலிக்கு பிறந்தது பூணை யாகுமா!!!
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 20:56 Report Abuse
தலைநகர தமிழன் இளையராஜா அளவுக்கு யுவன் இல்லை என்றே சொல்லலாம் 1000 படங்களுக்கு இசை அமைத்த அவரை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்
Rate this:
mani - ngl  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2013 - 20:26 Report Abuse
mani யுவன் சூப்பர் மியூசிக் டைரக்டர் .பில்லா மங்காத்தா ஆரம்பம் தீம் மியூசிக் அமர்க்களம் .மேலும் இது போல வெற்றி பெறுவீர்கள் .நூறாவது படத்தி்ன் பாடல் கண்டிப்பாக கிட் ஆகும் .வெங்கட்பிரபு சூப்பர் டைரக்டர். ஆனால் கார்த்தி் நடித்ததால் படம் நல்லா இருக்குமானு கொஞ்சம் பயம்.
Rate this:
டோப்பா மாமா கனகன் - கீழ்பாக்கம்,சென்னை-600010,இந்தியா
01 டிச, 2013 - 13:06 Report Abuse
 டோப்பா மாமா கனகன் பிரியாணிய ரசிக்கனும்ன கண்டிப்பா தால்சா,தயிர் வெங்காயம்,சிக்கன் 65 வேணும் பாஸ்.அதாவது நவரசமும் கலந்த ஒரு தினுசான நல்ல டேஸ்டா இருக்கனும்.யுவன் இசையில் கலக்குவார்.பிரியாணி சூப்பார இருக்கனும்.தலைவாழ இல போட்டு சாப்புடலாம்.வரட்டும் பாப்போம்,வழக்கமான முனியாண்டிவிலாஸ் பிரியாணியா இல்ல திண்டுக்கல் ஸ்பெசல் வேணு பிரியாணியானு பாப்போம்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in