Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் நான் சிகப்பு மனிதனில் இனியா!

30 நவ, 2013 - 17:11 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவேளைக்குப்பிறகு பாண்டியநாடு மூலம் வெற்றிக்கனியை பறித்திருக்கிறார் விஷால். அதிலும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த இந்த படத்தை சொன்ன தேதியில் சரியான வெளியிட்டு நல்லதொரு தயாரிப்பாளராகவும் நிரூபித்திருக்கிறார். முக்கியமாக தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படமே தனக்கு வெற்றியை கொடுத்திருப்பதால் மீண்டும் அடுத்த படத்தையும் தானே தயாரித்து நடிக்கிறார் விஷால். கூடவே யுடிவியும் தயாரிப்பில் அவருடன் கைகோர்த்திருக்கிறது.

ஆக, அடுத்த படமான நான் சிகப்பு மனிதன் படப்பிடிப்பில் பிசியாகி விட்ட விஷால், அந்த படத்திற்கும் தனது பாண்டியநாடு கதாநாயகியான லட்சுமிமேனனையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும், இன்னொரு கதாபாத்திரத்திற்காக வாகை சூடவா, மெளனகுரு படங்களில் நடித்த இனியாவை இணைத்திருக்கிறார்.

இப்படத்தின் டைரக்டரான திரு, படத்திற்கு இன்னொரு கதாநாயகி தேடிவந்தபோது, வாகை சூடவா மட்டுமின்றி அன்னக்கொடி படத்திற்காக எடுக்கப்பட்ட இனியாவின் புகைப்படங்கள் அவரை வெகுவாக பாதித்ததாம். அதனால், லட்சுமிமேனனுக்கு இணையாக நடிக்கத் தெரிந்த நல்ல நடிகை அவர் என்று இனியாவுக்கு இந்த வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்களாம்.

கதைப்படி செகண்ட் ஹீரோயினி வேடம்தான். என்றாலும், தமிழில் சறுக்கிக்கிடக்கும் தனது மார்க்கெட்டை தூக்க நிறுத்தவே உடனே சம்மதம் தெரிவித்திருககும் இனியாவுக்கு, பாடல் காட்சி மட்டுமின்றி, பர்பாமென்ஸ் காட்சிகளும் நிறைய உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:53 Report Abuse
தலைநகர தமிழன் இனியாவின் திரையுலக வாழ்க்கை இனிமையாய் அமையும்
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 20:57 Report Abuse
தலைநகர தமிழன் வரும் வாய்ப்பை பயன்படுத்து கொள்ள வேண்டியதுதான் இனியா
Rate this:
டோப்பா மாமா கனகன் - கீழ்பாக்கம்,சென்னை-600010,இந்தியா
01 டிச, 2013 - 13:08 Report Abuse
 டோப்பா மாமா கனகன் இன்னாது லச்சுமிய விஷால் கழட்டி உட்டுட்டாரா??அய்யகோ.இது விஷாலுக்கே அடுக்குமா?இனியா நீ நடிப்புல முக்கனியா?
Rate this:
காடுவெட்டி குருசாமி - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
01 டிச, 2013 - 09:33 Report Abuse
காடுவெட்டி குருசாமி இனியா உண்டியல போல அழகாக இருக்கிறார்.விஷால் ஜொல்லலாம்.
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
30 நவ, 2013 - 19:49 Report Abuse
Arumugam லட்சுமிமேனனுக்கு இணையாக நடிக்கத் தெரிந்த நல்ல நடிகை இனியா என்பதை விட, லட்சுமிமேனனை விட அழகும் திறமையும் அதிகமுள்ள நடிகை இனியா என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.எதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் லட்சுமிமேனனுக்கு இருப்பது உண்மை. விஷால் ஒரு சிறந்த, திறமையுள்ள நடிகர்,தயாரிப்பாளர். அவருடன் இணைந்து இனியா நடித்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து வெற்றி பெரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in