தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.
சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு இன்று(நவ., 30ம் தேதி) மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், வை ராஜா வை படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு இன்று(டிச. 1ம் தேதி) கண்ணமாபேட்டை மயானத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
மறைந்த ரகுராமிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், கே.எஸ்.ரவிக்குமார், நமீதா, ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.