Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப்பிறகு விஜயசேதுபதிதான்! கேயார் ஓப்பன் டாக்

30 நவ, 2013 - 14:33 IST
எழுத்தின் அளவு:

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது கதாநாயகன் கேரியரைத் தொடங்கிய விஜயசேதுபதி, அதற்கடுத்து நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருகிறது. கைவசமும் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார். ஆனபோதும். இப்போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், நல்ல கேரக்டராக யார் கொடுத்தாலும் நடிக்கிறார். அதோடு, தயாரிப்பாளர்களின் விரலுக்கேற்ற வீக்கமாக தனது சம்பளத்தையும் ஆளைப்பொறுத்து வாங்கிக்கொண்டு வருகிறார் என்கிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் விஜயசேதுபதிக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பட விழாவில், தமிழ்த்திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தலைவரான கேயாரும் தனது பங்குக்கு விஜயசேதுபதியைப் பற்றி சில விசயங்களை ஓப்பனாக பேசினார்.

அப்போது, தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படக்கூடாது என்று நினைத்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிதான். தாங்கள் நடிக்கிற படங்கள் நன்றாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்குப்பிறகு இப்போது விஜயசேதுபதி அப்படி நினைக்கிறார். தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களும் வெற்றி பெற வேண்டும். தன்னை நம்பி பணம் போடுகிறார்கள் எக்காரணம் கொண்டு நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து நடிக்கிறார்.

அதனால் மற்ற ஹீரோக்களும், விஜயசேதுபதியை பின்பற்றினால், தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவது தவிர்க்கப்படும் என்றார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 21:02 Report Abuse
தலைநகர தமிழன் நல்ல மனசுக்காரரை வாழ்த்தி வரவேற்போம்
Rate this:
raju - rajapalayam  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2013 - 17:10 Report Abuse
raju kilapoldu ajith irukaru
Rate this:
01 டிச, 2013 - 12:41 Report Abuse
THALA ASITH KUMAR, 2ND STD  FAIL, CYCLE MECHANIC அசல் தல இருக்கும்பொழுது வேறு எவன் டா.??!!! 50 படம் FALIUR கொடுத்தாலும் எங்க தல தான் டாப்..
Rate this:
m.k.raj - Chennai,இந்தியா
01 டிச, 2013 - 10:00 Report Abuse
m.k.raj kR ஐ மெண்டல் என்றும் , விஜய் சேதுபதி ஒரு நடிகரா என்று கேட்கும் அறிவு ஜீவிகளே , அப்போ இவர் படத்தை பார்ப்பவன் எல்லாம் மென்டலா? இத்தனை வசூலை கொடுப்பது மெண்டல்களின் சாதனையா??
Rate this:
காடுவெட்டி குருசாமி - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
01 டிச, 2013 - 09:37 Report Abuse
காடுவெட்டி குருசாமி விஜய் பெயரை முன்னே கொண்டுள்ள சேதுபதியை எம் ஜி ஆர் சிவாஜியுடன் ஒப்பிடுவது லூசுத்தனமான எண்ணம்.கே ஆர் திருந்த வேண்டும்.தல ஒருவர் தான் தன்நிகரில்லா அல்டிமேட் நடிகர்.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in