Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாட்டுக்கு ஆட மறுத்த லேகாவாஷிங்டன்!

30 நவ, 2013 - 12:37 IST
எழுத்தின் அளவு:

வினய் தமிழில் அறிமுகமான உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் லேகா வாஷிங்டன். அதையடுத்து மீண்டும் அதே வினய்யுடன் ஜெயங்கொண்டான், பிறகு வா குவாட்டர் கட்டிங் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது பிரசன்னாவுடன் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் அப்படம் திரைக்கு வருகிறது.

இதற்கு முன்பு, தங்கை வேடம், வித்தியாசமான கேரக்டர் என்றெல்லாம் நடித்த லேகா, இந்த படத்தில் ஹோம்லி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒரு கல்யாணத்தை சுற்றியே நடைபெறும் இந்த கதையில், குடும்ப பெண்ணாக, காதலியாக, மனைவியாக பல பரிமாணங்களில் நடித்துள்ளாராம். அதனால் இதன்பிறகு கோலிவுட்டில் தனக்கு நல்லதொரு குடும்ப இமேஜ் உருவாகும் என்று எதிர்பார்க்கிறாராம் லேகா.

ஆனால் இந்த நேரத்தில், சில முன்னணி ஹீரோயினிகளே தற்போது குத்துப்பாடல்களுக்கு நடனமாடுவதை கருத்தில் கொண்ட ஒரு பட நிறுவனம், ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம்போட லேகாவுக்கு அழைப்பு விடுத்ததாம். ஆனால், படத்தின் ஹீரோ யார், டைரக்டர் யார் என்ற விவரம் எதையுமே கேட்காத அவர், கோடி ரூபாய் கொடுத்தாலும் குத்துப்பாட்டுக்கு ஆட மாட்டேன். அப்படி ஆடிதான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையிலும் நான் இல்லை என்று தடாலடியாக பேசி போனை கட் பண்ணிவிட்டாராம். அந்த அளவுக்கு பிரசன்னாவுடன் நடித்துள்ள படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளாராம் லேகா வாஷிங்டன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 20:04 Report Abuse
தலைநகர தமிழன் கொள்கை முடிவில் இருந்து இறங்காமல் இருப்பது நல்லது
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:50 Report Abuse
LAX Good..
Rate this:
sakthi - cbe  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2013 - 23:39 Report Abuse
sakthi குத்த பழகிக்கோ அப்பர எப்படி
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 நவ, 2013 - 14:52 Report Abuse
kumaresan.m எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் பிறகு இறங்கி வருவீர்கள்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 நவ, 2013 - 14:52 Report Abuse
kumaresan.m " குத்து ஆட்டம் போட்டால்தானே குஷியாக இருக்க முடியும் லேகா ???
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in